இந்திய அணிக்கு ஆப்பு காத்திருக்கு, பென் ஸ்டோக்ஸ் பிளான் இது - வொர்க் அவுட் ஆகுமா?

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பக்கா பிளான் போட்டுள்ளார். அவர் கையில் எடுக்கும் 3 பிளான்கள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2024, 08:20 PM IST
  • கிளைமேக்ஸை நெருங்கிய ராஞ்சி டெஸ்ட்
  • இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு
  • இந்திய அணியை சாய்க்க பென் ஸ்டோக்ஸ் பிளான்
இந்திய அணிக்கு ஆப்பு காத்திருக்கு, பென் ஸ்டோக்ஸ் பிளான் இது - வொர்க் அவுட் ஆகுமா? title=

ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிளைமேக்ஸை எட்டியிருக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி முகத்தில் இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 4வது நாளின் தொடக்கத்தில் ஒரு சில விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற முடியும். இதனால், இப்போட்டியில் வெற்றிக்கான ரேஸில் இரு அணிகளுமே இருக்கின்றன. ஒருபடி வேண்டுமானால் இந்திய அணி இருக்கலாம். ஏனென்றால், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழக்காமல் 40 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் படிக்க | பரிதாப நிலையில் பாஸ்பால்... வெற்றியை நெருங்கும் இந்தியா... ரோஹித் - ஜெய்ஸ்வால் மிரட்டல்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஷ்வால் 16 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கிளைமேக்ஸ், நான்காவது நாள் ஆட்டம் நடைபெறும் திங்கட்கிழமை தெரியும். இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் ஒரு மணி நேரம் விக்கெட் விடாமல் ஆடினாலே போதும். அதன்பிறகு, பேட்ஸ்மேன்கள் செட்டாகி, ஈஸியாக சேஸிங் செய்துவிடலாம். ஆனால், அவசரப்பட்டு விக்கெட் மட்டும் முன்கூட்டியே விட்டுவிட்டால் அது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக போய்விடும்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென்ஸ்டோக்ஸின் பிளானும் அதுதான். நாளை போட்டி தொடங்கியவுடன் முதல் ஒரு மணிநேரத்தில் குறைந்தபட்சம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அப்படி செய்துவிட்டால், நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்திருக்கும் ஸ்டோக்ஸ், அதற்கான துருப்புச் சீட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கிறார். இருவரும் துல்லியமான லைன் அன்ட் லென்தில் பந்துகளை வீசி ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் விக்கெட்டை எடுத்துவிட்டால் ராஞ்சி டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக போய்விடும்.

ஸ்டோக்ஸின் அடுத்த துருப்புச் சீட்டுகள் சோயிப் பஷீர் மற்றும் டாம் ஹார்டிலி. இருவரும் சுழற் பந்துவீச்சாளர்கள். மூன்றாம் நாள் ஆடத்திலேயே பந்து நன்றாக சுழன்றதாலேயே அஸ்வின், குல்தீப் ஆகியோர் இந்திய அணியில் விக்கெட்டுகளை அள்ளினர். அதனால், தங்கள் அணியில் இருக்கும் தரமான பந்துவீச்சாளர்களான சோயிப் பஷிர், டாம் ஹார்டிலி ஆகியோரின் பந்துவீச்சை பெரிதும் நம்பியிருக்கிறார் ஸ்டோக்ஸ். அவர்கள் மட்டும் துல்லியமாக பந்துவீசி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை காலி செய்தால், இங்கிலாந்து அணியின் வெற்றியை தடுக்க முடியாது. அதனால் இந்திய அணி அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடினாலே ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றலாம். 

மேலும் படிக்க | நடப்பு சாம்பியனை சம்பவம் செய்த தமிழ்நாடு... ரஞ்சி டிராபி அரையிறுதியில் என்ட்ரி - ஏன் முக்கியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News