நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து சுப்மன் கில் அசத்தல்

Shubman Gill Hits Double Century: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய வீரர் சுப்மன் கில். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 18, 2023, 06:00 PM IST
நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து சுப்மன் கில் அசத்தல் title=

India vs New Zealand, 1st ODI Scorecard: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 87 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார். ஒருநாள் போட்டிகளில் 19 இன்னிங்கிஸில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்தார். விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி உள்ளார். இந்திய அணி வீரர்களான கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்து 145 பந்துகளில் சுப்மான் கில் இரட்டை சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.

மேலும் படிக்க: இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்த இஷான்! ரோகித், சச்சின் எலைட் லிஸ்டில் இடம்

சமீபகாலமாக இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வரலாறு படைத்து வருகின்றனர். முன்னதாக வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 131 பந்துகளை மட்டுமே எதிர் கொண்ட இஷான் கிஷன் 210 ரன்கள் எடுத்தார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது, பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான பேட்ஸ்மேன் சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் எடுத்தார். இருவரும் இளம் வீரர்கள். இவர்களின் வரலாற்று சாதனையை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க: சூர்யகுமாரை சோதிக்கும் இந்திய அணி... தொடர்ந்து கோளாறு கொடுக்கும் கேஎல் ராகுல்! 

இளம் வீரர் சுப்மன் கில் அசத்தலான 200 ரன்களை கடந்தது மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் முறியடித்தார். சவுரவ் கங்குலி, விராட் கோலி, மகேந்திர சிங் தோனி போன்றோரை ஷுப்மான் கில் பின் தள்ளினார். அதாவது இந்த மூன்று வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக 183 ரன்களை மட்டும் எடுத்துள்ளனர். இன்றைய ஆட்டத்தின் மூலம் கில் இந்த அனைத்து வீரர்களையும் கடந்து இரட்டை சதம் அடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார். இவர் தனது 23வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார். முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக 24 வயதில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் பெயரில் இந்த சாதனை இருந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரத்தை கடந்தவர்களில் கில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ஃபகார் ஜமான் 18 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை அடித்தார். அவர் முதலிடத்தில் உள்ளார். 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எடுத்த வரிசையில், ஷுப்மான் கில், பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் இருவரும் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் படிக்க: பொங்கல் வின்னர் விராட் கோலி... தூள் தூளாகி போன சச்சின் சாதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News