டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை -ரோஹித் சர்மா

Rohit Sharma: நான், ராகுல், அஜித், அல்லது பிசிசிஐயைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசாத வரையில், " வெளியாகும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2024, 02:00 PM IST
டி20 உலகக் கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை -ரோஹித் சர்மா title=

T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்டதற்கு, "அது உண்மை இல்லை" என நிராகரித்தார். இதுபோன்ற ஊகங்கள் மற்றும் வதந்திகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அணி தேர்வு குறித்த ஊடக ஊகங்களை கேலி செய்தார்.

மும்பையில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், அதில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியதாகவும் மற்றும் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்ய விராட் கோஹ்லிடம் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன் அடிப்படையில் ரோஹித் சர்மாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதாவது கிளப் ப்ரேரி ஃபயர் பாட்காஸ்டின் சமீபத்திய எபிசோடில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடனான உரையாடலின் போது அவர் இதைப் பகிர்ந்து கொண்டார்.

நகைச்சுவையாக பதில் அளித்த ரோஹித் சர்மா

இந்திய அணி தேர்வு தொடர்பாக யாரையும் சந்திக்கவில்லை என்று கூறி ஊக`ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அஜீத் அகர்கர் துபாயில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும், ராகுல் டிராவிட் மும்பையில் தனது மகன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

மேலும் படிக்க - T20 உலகக் கோப்பை 2024: எதற்கும் நான் ரெடி.. பதில் தந்த விராட் கோலி.. மாற்றத்துக்கு தயாராகும் BCCI

அதாவது அஜீத் அகர்கர் துபாயில் கோல்ஃப் விளையாடுவதில் மும்முரமாக இருப்பதாகவும், அதே சமயம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மும்பையில் உள்ள சிவப்பு மண் ஆடுகளத்தில் தனது மகன்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் ரோஹித் சர்மா தெளிவுப்படுத்தினார்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ள 2024 உலகக் கோப்பை தொடரில், நீங்களும், விராட் கோஹ்லியும் இணைந்து தொடக்க வீரர்களாக களம் இறங்க ஆலோனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறித்து கேட்டதற்கு, வெறும் சிரிப்பை பதிலாக அளித்தார் ரோஹித் ஷர்மா.

செய்திகள் அனைத்தும் போலியானவை -ரோஹித் சர்மா

நாங்கள் இதுவரை சந்திக்கவில்லை. இன்றைய காலகட்டத்தில், நான், ராகுல், அஜித், அல்லது பிசிசிஐயைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசாத வரையில், " வெளியாகும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என்று ரோஹித் கூறினார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடர் எப்பொழுது? 

2024 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன

மேலும் படிக்க - T20 WC: உலக கோப்பை அணியில் சுப்மன் கில், பாண்டியாவிற்கு இடமில்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News