Gautam Gambhir: உலக கோப்பையை வெல்ல கேப்டன் எல்லாம் முக்கியமில்லை - கம்பீர் அட்வைஸ்

Gautam Gambhir: உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கேப்டன் எல்லாம் முக்கியமில்லை, அணியில் இருக்கும் வீரர்கள் பார்மில் இருந்தாலே போதும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2023, 06:10 PM IST
  • இந்திய அணிக்கு கேப்டன் முக்கியமில்லை
  • பார்மில் இருக்கும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகித் சர்மா கருத்து
Gautam Gambhir: உலக கோப்பையை வெல்ல கேப்டன் எல்லாம் முக்கியமில்லை - கம்பீர் அட்வைஸ் title=

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக விவாதம் சூடுபிடித்துள்ளது. நவம்பர் 2022 முதல் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ள ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருவதால், அவரது வருகை எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை.

ரோஹித் இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கான கேப்டன் பதவிக்கு வாய்ப்புள்ளவர்கள் என்று கருதப்படுகிறார்கள். ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் அவர் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார். சூர்யகுமாரும் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். மிடில் ஆர்டர் மற்றும் பினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததுடன் தொடரையும் வெற்றி பெற்றார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் அவரே இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார்.

மேலும் படிக்க | IPL 2024: எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ஐபிஎல் ஏலம்... எப்போது, எங்கே இலவசமாக பார்ப்பது?

இந்நிலையில், உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்த யார் தகுதியானவர்கள் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது கேப்டன் பதவி முக்கியமல்ல, அணிதான் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலில் ஃபார்மில் இருக்கும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் அவர்களில் ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"கேப்டன் முக்கியமில்லை, அணிதான் முக்கியம். முதலில் ஃபார்மில் இருக்கும் வீரர்களைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் ஃபார்மில் இருக்கும் ஒரு வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஃபார்மில் இல்லாத வீரரை நீங்கள் கேப்டனாக்க கூடாது. அதனை பிசிசிஐ செய்யாது. அது ரோஹித் சர்மாவா அல்லது ஹர்திக் பாண்டியாவா அல்லது சூர்யகுமார் யாதவா? யாராக இருந்தாலும் இதுதான் நிலவரம். அதேபோல தான் ரோஹித் ஃபார்மில் இல்லை என்றால், நீங்கள் அவரை தேர்வு செய்ய மாட்டீர்கள். கேப்டனை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல, டி20 உலகக் கோப்பைக்கான சரியான அணியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே முக்கியம். அதற்கு முன் ஐ.பி.எல். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவரையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீரின் இந்த கருத்து முற்றிலும் நியாயமானது என்று கூறலாம். டி20 உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான போட்டி, அதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். எனவே, அதற்கு சிறந்த அணியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். ஃபார்மில் இருக்கும் வீரர்கள் அணியில் இடம்பெற்றால், அணி வெற்றிபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ரோஹித் சர்மா உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து முழுமையாக மீண்டு, ஃபார்மில் திரும்பினால், அவர் டி20 உலகக் கோப்பைக்கான கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும், அவர் ஃபார்மில் இல்லை என்றால், ஹர்திக் பாண்டியா அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் கேப்டன் பதவி செல்ல அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா யோ-யோ ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெறுகிறாரா? பயிற்சியாளரின் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News