அக்சர் படேலுக்கு காயம்... உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழருக்கு வாய்ப்பா?

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள அக்சர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் அணிக்கு தேர்வாகலாம் என கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2023, 07:07 PM IST
  • அக்சர் படேல் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகல்.
  • வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பை இந்திய அணியில் சேர்ப்பு.
  • ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
அக்சர் படேலுக்கு காயம்... உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழருக்கு வாய்ப்பா? title=

ICC World Cup 2023: கிரிக்கெட் உலகமே அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை தொடரை தான் எதிர்பார்த்து இருக்கிறது. அனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு தங்களின் அணியை வலுவாக தயார்படுத்தி வருகிறது எனலாம்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் நடப்பு ஆசிய கோப்பையில் விளையாடின. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. மற்றொரு பக்கம், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகளும் தங்களுக்குள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.

வலிமையான இந்திய அணி?

தற்போது அக். 5ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவ. 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த செப். 5ஆம் தேதி அறிவித்தது. அதில், கில், விராட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவதிப்படும் ஷ்ரேயாஸ் ஐயர்

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் ஏற்கெனவே ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், வங்கதேச அணியுடனான நேற்றைய சூப்பர் 4 போட்டியில் ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுக்கு இடது கை விரலில் அடிபட்டது. இதனால், அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது. 

மேலும் படிக்க | ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்தியர்கள்

அக்சர் படேலுக்கு காயம்

மேலும், அவருக்கு பதில் வலது கை ஆல்-ரவுண்டரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் இறுதிப்போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அக்சர் படேல் இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஷர்துல் தாக்கூர் பிளேயிங் லெவனில் இருந்தால், அக்சர் படேல் அணியில் விளையாடுவது வாய்ப்பு குறைவாகவே இருந்தது. தற்போது அதே நிலை தான் வாஷிங்டன் சுந்தருக்கும் என்றாலும், அவர் ஷர்துல் தாக்கூரை விட பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.

சுந்தர் vs அஸ்வின்

வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அணியில் ஏற்பட்ட இந்த மாற்றம் உலகக் கோப்பை தொடரிலும் எதிரொலிக்கும் என வல்லுநர்கள் நினைக்கின்றனர். ஒருவேளை அக்சர் படேல் காயத்தில் இருந்து மீளாவிட்டால் வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பை அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், தற்போதைய உலகக் கோப்பை அணியில் ஆஃப் ஸிபின்னர் இல்லை. 

எனவே, ஆஸ்திரேலிய தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வாய்ப்பளித்தால் உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவரை அக்சர் படேலுக்கு பதில் அணியில் கொண்டு செல்லலாம் என இந்திய அணி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அஸ்வின் தான் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் வீடியோவை நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | IND vs BAN: சீன் போட்ட இந்தியாவை காலி செய்த வீரர் இவர் தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News