இடது கை தோனி என இளம் வீரருக்கு பட்டம் சூட்டிய அஸ்வின்! யார் அந்த வீரர்

Ravichandran Ashwin: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், இந்திய அணியின் இடதுகை தோனி என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2024, 12:42 PM IST
  • ரிங்கு சிங் மிக சிறப்பாக விளையாடுகிறார்
  • அவர் இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை
  • இடதுகை தோனி என அஸ்வின் புகழாரம்
இடது கை தோனி என இளம் வீரருக்கு பட்டம் சூட்டிய அஸ்வின்! யார் அந்த வீரர் title=

Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமாக ரிங்கு சிங், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 69 ரன்களை விளாசினார். இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கிய ரிங்கு சிங், நங்கூரம் போல் நிலைத்து நின்று,ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக விளையாடினார். விக்கெட்டை காப்பாற்றியதோடு, கட் ஷாட் மூலம் சில பவுண்டரிகளையும் எளிதாக விளாசினார். ரோகித் சர்மாவை ஒரு பக்கம் அதிரடியாக விளையாட விட்டு, நிதானமாக ரன்களை சேர்த்தார். 

ஒரு கட்டத்தில் ஃபினிஷிங் கொடுக்க வேண்டிய நிலை வந்த போது, 18வது ஓவருக்கு பின் சிக்சரை விளாசி தொடங்கினார் ரிங்கு சிங். அதில் கடைசி 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ஃபினிஷ் செய்தது பலரையும் மிரள வைத்துள்ளது. அவரின் ஆட்டம் சூழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால், இந்திய அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார் ரிங்கு சிங். இந்த பேட்டிங் மூலம் அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டியிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்து வைத்துள்ளார்.

மேலும் படிக்க - IPL Auction: இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரிங்குசிங் விளையாடியதை பார்த்து இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். இவர் இந்திய அணியின் இடதுகை தோனி எனவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். தோனி மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் இப்போது அவரை தோனியுடன் ஒப்பிடமுடியாது என்றாலும் அவருடைய சில அணுகுமுறைகளை ரிங்கு சிங்கிடம் நான் பார்க்கிறேன். தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங். 

ஏனென்றால் உத்தரப் பிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஏராளமான ரன்களை விளாசியுள்ளார். அதன்பின் கேகேஆர் அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஒருமுறை அந்த அணியினருடன் பேசும் போது, ரிங்கு சிங் பல ஆண்டுகளாக பெஞ்சில் தான் இருந்தார். ஆனாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை என்று தெரிந்தும், ஒருநாளும் பயிற்சியை ரிங்கு சிங் மிஸ் செய்ய மாட்டாராம். வலை பயிற்சியின் போது பேட்ஸ்மேன்கள் பந்துகளை விளாசி தள்ளுவார்கள்.

அப்படி விளாசப்படும் பந்துகளை ஓடி ஓடி எடுத்து வந்து பவுலர்களிடம் கொடுப்பார் என்று கூறினார்கள். அதன்பின் கேகேஆர் அணியில் வாய்ப்பு கிடைத்து திறமையை நிரூபித்து இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இப்போது ரிங்கு சிங், No Fear.. When i am here என்று சொல்லி சொல்லி அடிக்கிறார். டி20 கிரிக்கெட்டில் ஆர்வத்தை தூண்ட வேண்டும், அதேபோல் கன்சிஸ்டன்சி இருக்க வேண்டும். அதனை செய்வது எளிதல்ல. ரிங்கு சிங் இரண்டையும் சிறப்பாக செய்வதாக பாராட்டியுள்ளார் அஸ்வின்.

மேலும் படிக்க - LIVE | IPL 2024 Auction Updates : தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்... கோடிகளில் புரளப்போவது யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News