வார ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

Weekly Horoscope (2024 May 20th to May 26th): வாராந்திர ராசி பலனின் படி, மே 20 முதல் 26 வரையிலான நேரம் சிறப்பானது. சோம வார பிரதோஷ விரதத்துடன் தொடங்கும், இந்த வாரம் சிவபெருமானின் மகனான கணபதியின் சதுர்த்தியுடன் வாரம் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான அனைத்து ஜோதிட பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2024, 11:33 AM IST
  • அனைத்து ராசிகளுக்கும் ஆன வார ராசிபலன் (2024 மே 20 முதல் 26 வரை)
  • வேலை, தொழில் துறையில் நிதானமாக செயல்பட வேண்டியிருக்கும்.
  • வெளி நபரின் குறுக்கீடு காரணமாக வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
வார ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!! title=

Weekly Horoscope (2024 May 20th to May 26th): வாராந்திர ராசி பலனின் படி, மே 20 முதல் 26 வரையிலான நேரம் சிறப்பானது. சோம வார பிரதோஷ விரதத்துடன் தொடங்கும், இந்த வாரம் சிவபெருமானின் மகனான கணபதியின் சதுர்த்தியுடன் வாரம் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான அனைத்து ஜோதிட பலன்களை தெரிந்து கொள்ளலாம்

மேஷம் - வேலை, தொழில் துறையில் நிதானமாக செயல்பட வேண்டியிருக்கும். சிறிய விஷயங்களை பெரிதாக்காமல் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வணிக பிரிவினரின் தன்னம்பிக்கை அளவு அதிகரிக்கும். உங்கள் கூட்டாளியின் தொழிலுக்கு நேரம் நல்லது, அவர்களுக்கு ஆதரவளிக்கவும். உங்கள் குழந்தையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியிருக்கலாம் அல்லது அவருடைய வேலைக்காக அலைய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ​​​​உடல் பிரச்சனைகளில் கவனக்குறைவாக இருந்தால், ஆரோக்கியம் மேலும் மோசமடையக்கூடும்.

ரிஷபம் - அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், ஆனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், எனவே எந்த வேலையையும் செய்ய கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம். மாறாக எல்லா வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்கவும். வணிக வர்க்கம் பணம் சம்பாதிக்க பயணம் செய்ய வேண்டியிருக்கும். இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். குடும்ப சூழ்நிலையும் சாதாரணமாக இருக்கும். நீங்கள் உடலில் பலவீனத்தை உணரலாம், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சத்தான உணவை உண்ணலாம்.

மிதுனம் - தங்களின் தற்போதைய வேலை அல்லது வேலை செய்யும் பாணியால் அதிருப்தி அடைந்தாலும், மனதை நிலைநிறுத்தி தொடர்ந்து பணியாற்றுங்கள். வேலையில், உங்களுக்கு உதவ புதிய நபரை நியமிக்கும்போது கவனமாக இருங்கள். ஏனெனில் அதனால் சில நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். வெளி நபரின் குறுக்கீடு காரணமாக உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். வீட்டின் தேவையை கருத்தில் கொண்டு மின்னணு சாதனங்கள் வாங்க பணம் செலவழிக்கக் கூடும். வாரத்தின் ஆரம்ப நாட்களில் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்படலாம் ஆனால் பின்னர் எல்லாம் சரியாகும்.

கடகம் - அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளால் உங்கள் பணி பாராட்டப்படலாம். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த வாரத்தில் வேலை சம்பந்தமான தேடல்கள் நிறைவேறும். நீங்கள் புதிய நிறுவனத்தில் சேர விண்ணப்பித்திருந்தால், உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் பெற்றோர் மற்றும் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும், ஆரம்பத்தில் கவனம் செலுத்தினால், பெரிய செலவுகளைத் தவிர்க்கலாம். அதிகமாகச் சிந்திப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

சிம்மம் - வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கலாம். மேலும் இடம் மாற வேண்டி வரும். வாடகை வருமானம் வருமான ஆதாரமாக மாறும். மேலும் சொத்து வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் லாபம் இருக்கும். இளைஞர்கள் தொழில் விஷயங்களில் மூத்தவர்களின் ஆலோசனைகளை பெற தயங்கக் கூடாது. குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும், இந்த வாரம் அனைவருடனும் மகிழ்ச்சியாக இருக்கும். எந்த விலங்கையும் தொந்தரவு செய்யாதீர்கள். இல்லையெனில் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

கன்னி -  சக ஊழியர்களால் ஆதாயத்தைப் பெறுவார்கள். மேலும் நீங்கள் வேலை தொடர்பாக வேறு சில நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். வணிக வர்க்கம் இந்த வாரம் சம்பாதிக்க இன்னும் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும். வார இறுதியில் கடின உழைப்பு பலனைத் தரும். வருமானம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தால், அதை தவற விடக்கூடாது. உறவினர் நிதி உதவி கேட்கலாம். தீக்காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.

துலாம் - இந்த வாரம் வேலை அதிகமாக இருக்கும். எனவே ஒரு வேலையை முடித்த பிறகே மற்ற வேலைகளை தொடங்குங்கள், அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தால் குழப்பம் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரம் சாதாரணமாக இருக்கும். நீங்கள் தீவீரமாக முயற்சி செய்தால்நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது, . இளம் ஜோடிகளின் உறவு சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடலாம். சத்தான உணவுகளை உண்ணுங்கள் மற்றும் முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும்.

மேலும் படிக்க | மகாலட்சுமிக்கு பிடித்தமான 5 ராசிகள் இவை தான்! எப்பொழுதும் அதிர்ஷ்டம் இருக்கும்!

விருச்சிகம் - கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன் சக ஊழியர்களிடம் வாக்குவாதங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். ஏதேனும் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அந்த வாரம் அதற்கு சாதகமாக இல்லை. எனவே அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் நண்பர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் பொறுப்பை நீங்கள் ஏற்கலாம். உங்கள் துணைக்கு உங்கள் ஆதரவு தேவை, உங்கள் ஆதரவுடன் அவருடைய/அவளுடைய பல பணிகள் நிறைவேறும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, வயிற்று பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கலாம்.

தனுசு - புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். எனினும் எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. நிபுணரின் ஆலோசனைப்படி தொழிலில் செய்யும் முதலீடு லாபம் தரும். போட்டிக்குத் தயாராகும் இளைஞர்கள் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்தாலும் தைரியத்தை இழக்காமல் மீண்டும் முயற்சிக்கவும். உங்கள் தந்தையின் நிறுவன முன்னேற்றம் தொடர்பாக, ஏதேனும் வணிக விஷயங்கள் இருந்தால் கண்டிப்பாக அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி குறிப்பிடுகையில், கண் தொடர்பான பிரச்சனை அல்லது சருமப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகரம் - வேலை, தொழில் ரீதியாகப் போராட்டமாக இருக்கும். சிறிய வேலைகள் கூட தொடக்கத்தில் அதிக நேரம் எடுக்கும். மறுபுறம், நிதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் நன்மைகளைப் பெறலாம். இளைஞர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சச்சரவுகளை எதிர்கொள்வார்கள், ஆனால் அவை தீர்க்கப்படும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், எனவே நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். கை, கால்களில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம் - இந்த வாரம் அலைச்சம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே எந்த முடிவை எடுத்தாலும் சிந்தித்து எடுங்கள். வேலையை முடிக்க இளைஞர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டியிருக்கும். பண விவகாரத்தில், உங்களுக்கு நெருக்கமான ஒருவர் கடன் கேட்டு வந்தால், மிகவும் யோசித்து கடன் கொடுக்கவும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடன் சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கலாம். மூல நோயாளிகள் கனமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மீனம் - தோல்விக்குப் பிறகுதான் வெற்றி கிடைக்கும். எனவே தோல்வி சூழ்நிலை ஏற்பட்டால் ஏமாற்றமடைய வேண்டாம். கிரகங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு வணிக வர்க்கத்தினரும் சேமித்த பணத்தைச் செலவு செய்ய நேரிடும். இளைஞர்கள் தங்கள் கூட்டாளியின் வேலையை முடிக்க அங்குமிங்கும் ஓட வேண்டியிருக்கும். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக அளவில் பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கும், இது நிதி நிலையை பாதிக்கும். இரத்த அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் நீடிக்கக்கூடும் என்பதால் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News