சோபகிருது ஆண்டில் இறுதி சூரியப் பெயர்ச்சி! மீன ராசிக்கு ஜாக்பாட் கொடுக்கும் பங்குனி!

Sun Transit Panguni 2024 : பங்குனி மாதத்தில், சூரிய பெயர்ச்சியால் அருமையான வாழ்வு யாருக்கு, அடக்கமாக இருக்க வேண்டியது யார், ஆர்ப்பட்டமான வெற்றி யாருக்கு என்பதை தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 13, 2024, 12:30 AM IST
  • பங்குனி மாத சூரிய பெயர்ச்சி
  • சூரியப் பெயர்ச்சியால் அருமையான வாழ்வு யாருக்கு?
  • சூரியப் பெயர்ச்சி மற்றும் பங்குனி மாத ராசிபலன்
சோபகிருது ஆண்டில் இறுதி சூரியப் பெயர்ச்சி! மீன ராசிக்கு ஜாக்பாட் கொடுக்கும் பங்குனி! title=

மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று, சூரிய பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. மீன ராசிக்கு செல்லும் சூரியனின் பெயர்ச்சியால் பங்குனி மாதம் உருவாவதால், பங்குனியை, மீன மாதம் என்றும் அழைக்கிறோம். பங்குனி மாதத்தில், சூரிய பெயர்ச்சியால் அருமையான வாழ்வு யாருக்கு, அடக்கமாக இருக்க வேண்டியது யார், ஆர்ப்பட்டமான வெற்றி யாருக்கு என்பதை தெரிந்துக் கொள்வோம்.  

சோபகிருது ஆண்டு பங்குனி மாத பலன்கள்

மேஷம்
மனகுழப்பங்களை ஏற்படுத்தும் மாதம் இது. பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களால் லாபம் ஏற்படும்.

ரிஷபம்
பங்குனி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நட்பு உண்டாகும். உடல் நிலையில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம்
செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடும் சூழல் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் துணை நிற்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும்.

கடகம்
மாற்று கருத்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், தேவையில்லாமல் கருத்துக்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணத்தால் அலைச்சல்கள் இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.

மேலும் படிக்க | திருமணம் ஆகாத பெண்கள் புதன்கிழமை தலைக்கு குளிக்க கூடாது! ஏன் தெரியுமா?

சிம்மம்
வியாபார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்,  கடன் பிரச்சினைகளால் மன அமைதி குறையும். ஆனால், எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி
பங்குனி மாதத்தில் பல நல்ல செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் திருப்தி ஏற்படும், அதனால் உற்சாகமும் கூடும், நல்ல பெயர் கிடைக்கும்.

துலாம்
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். போட்டி பொறாமைகள் மறைவதால் வாழ்க்கையில் நிம்மதி கிட்டும்.

விருச்சிகம்
வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறையும் காலம் இது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். கஷ்டங்கள் மறைந்து நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

தனுசு
உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் வாய் கட்டுபாடு நல்லது. குடும்பத்தில் மனைவி வழியில் நல்லது நடக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கடன்கள் குறையும் என்பதால் பங்குனி மாதம் நல்லதாக இருக்கும்.

மகரம்
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். வாராக்கடன்கள் வசூலாகும். வேலையில் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தின் முன்னேற்றத்திற்கான செய்தி வந்து சேரும்.

கும்பம்
குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வேலைபளு குறையும். தொழில் ரீதியிலான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்

மீனம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட்டால் செலவுகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் மாற்றங்கள் உருவாகும் மாதமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 2024 சோபகிருது ஆண்டு மாசி மாதம் 30ம் நாள் மார்ச் 13 புதன்கிழமை ராசிபலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News