குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும்

Guru Peyarchi Palangal: ரிஷப ராசியில் குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 15, 2024, 05:51 PM IST
  • தனுசு ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • உங்கள் தொழில் சம்பந்தமான பல முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
  • இந்த நேரத்தில் நீங்கள் தைரியம், வலிமை, தன்னம்பிக்கை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பணம், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும் title=

குரு பெயர்ச்சி பலன்கள்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. சில கிரகங்கள் உடனுக்குடன் ராசியை மாற்றும். சில கிரகங்கள் நீண்ட இடைவெளி விட்டு தங்கள் ராசியை மாற்றும். ஜோதிட சாஸ்திரத்தில் குருவிற்கு தேவர்களின் குரு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர் நல்ல பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். திருமண மகிழ்ச்சி, குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், அறிவு, கல்வி, பேச்சாற்றல், மரியாதை, நல்லொழுக்கம், ஆகியவற்றுக்கு இவர் காரணியாக உள்ளார். 

குரு ஒருவரது ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சியையும், செழிப்பையும், சந்தோஷத்தையும் பெறுகிறார். அவர் பல வெற்றிகளை குவிக்கிறார். அவருக்கு அனைத்து வித செல்வங்களும் கிடைக்கின்றன. 

9 கிரகங்களில் மிக சுபமான, அனுகூலமாக கிரகமாக கருதப்படும் குரு பகவான், மே 1, 2024 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் தற்போது மேஷ ராசியில் உள்ளார். ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.  

ரிஷப ராசியில் குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு மகத்தான வெற்றிகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடகம் (Aries) 

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவது நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் எதிரிகள் மீது வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு மிகவும் வலுவாக இருக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | உதயமாகும் செவ்வாய்... ஒளிமயமான எதிர்காலத்தை பெறும் ‘3’ ராசிகள்!

சிம்மம் (Leo)

ரிஷப ராசியில் குருவின் பெயர்ச்சியால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் உறவுகள் வலுவடையும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தொழில் சம்பந்தமான பல முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் தைரியம், வலிமை, தன்னம்பிக்கை மற்றும் அதிக ஆற்றல் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் அமையும். உங்கள் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். 

கும்பம் (Aquarius)

குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்ச்சி ஆவதன் பலனாக கும்ப ராசிக்காரர்கள் அதிகப் பணம் சம்பாதிப்பார்கள். உங்கள் பேச்சின் மூலம் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சமய காரியங்களிலும் ஆர்வம் காட்டுவ்வீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் காண இந்த பெயர்ச்சி நல்ல வாய்ப்பை அளிக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் திரும்ப கிடைக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு அடியிலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவையும் ஊக்கத்தையும் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உச்சமடைந்தார் சூரியன்.. பெயர்ச்சியால் எந்த ராசிக்கு பொற்காலம்? முழு ராசிபலன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News