கடகத்தில் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி.... திகட்ட திகட்ட மகிழ்ச்சி

Budhaditya Yog: புத ஆதித்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 10, 2023, 04:25 PM IST
  • சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் துலாம் ராசியினருக்கு மகிழ்ச்சியான வாய்ப்புகளைத் தரும்.
  • தொழிலில் சாதகமான பலன்கள் உண்டாகும்.
  • சம்பள உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன.
கடகத்தில் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், பதவி.... திகட்ட திகட்ட மகிழ்ச்சி title=

சூரியன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில், பெயர்ச்சி காரணமாக, இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்று சேரும். ஒரு ராசியில் கோள்கள் ஒன்று சேர்வதை யுதி என்று சொல்கிறோம். இப்படி கிரகங்களின் சேர்க்கையின் போது பல்வேறு வகையான யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களில் சில அசுபமாகவும், சில அசுப யோகமாகவும் இருக்கும். 

கிரகங்களின் இந்த சேர்க்கையால், பல சமயம் ராஜயோகமும் உருவாகிறது. சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக கருதப்படுகிறார். அவர் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். தற்போது அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். ஆனால் சூரியன் ஜூலை 16 அன்று அதிகாலை 4.59 மணிக்கு கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகஸ்ட் 17 மதியம் 1.27 வரை சூரியன் இந்த ராசியில் இருப்பார். அதேசமயம், புதன் கிரகம் ஏற்கனவே கடகத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் புத ஆதித்ய ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறது.

புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலனகள் கிடைக்கும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

துலா ராசி

சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் துலாம் ராசியினருக்கு மகிழ்ச்சியான வாய்ப்புகளைத் தரும். தொழிலில் சாதகமான பலன்கள் உண்டாகும். சம்பள உயர்வு, ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் நல்ல செய்திகளைத் தரும். நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்த இந்த ராசிக்காரர்களின் ஆசை நிறைவேறும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறுபுறம், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் பதவியைப் பெறலாம். ஒன்றன் பின் ஒன்றாக பல வெற்றிகள் உங்களை தேடி வரும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தால் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள்.

மேலும் படிக்க | 100 ஆண்டுக்கு பிறகு 3 ராசிகளின் தலைவிதி மாறும்! முக்கோண ராஜயோகத்தால் பண வரவு

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதன் இணைவது சுப பலன்களைத் தரும். புத்தாதித்ய ராஜயோகம் இவர்களின் கனவுகளை நிறைவேற்றும். இந்த காலத்தில் நண்பர்களின் ஆதரவும், உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பள உயர்வும் கூடும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடியும். 

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் நல்ல நாட்களைக் கொண்டுவரும். இவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் நிச்சயம் ஆகும். தொழிலதிபர்களுக்கும் நல்ல காலம் பிறக்கும். வியாபாரத்தில் சாதகமான முடிவுகள் காணப்படும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நவம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு சனியின் அருளால் அபரிமிதமான பலன் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News