ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்

Gajalakshmi Rajayogam: சுப யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2024, 01:18 PM IST
  • மீன ராசிக்காரர்கள் சுப கிரகங்களின் சேர்க்கையால் வருமானத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்.
  • உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இப்போது பெறுவீர்கள்.
  • உங்கள் தொழிலில் பெரிய வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.
ரிஷபத்தில் உருவான கஜலட்சுமி ராஜயோகம்: அமர்க்களமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான் title=

Gajalakshmi Rajayogam: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகியுள்ளது. மேலும் புதனும் இம்மாத இறுதியில் இந்த ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ரிஷப ராசியில் புதன் வருகையால் 2013ல் ரிஷப ராசியில் ஏர்பட்ட அதே சேர்க்கை பலன் மீண்டும் உருவாகும். அப்போது ரிஷப ராசியில் சுக்கிரன், குரு, சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் இணைப்பு இருந்தது. இம்மாத இறுதியில் மீண்டும் அதேபோன்றதொரு நிகழ்வு நிகழும். அதன் காரணமாக ரிஷப ராசியில் கஜலக்ஷ்மி யோகத்துடன், புதாதித்ய யோகம், மாளவ்ய ராஜயோகம் ஆகிய யோகங்களும் உருவாகவுள்ளன. 

ஜோதிட சாஸ்திரத்தில் ரிஷபத்தில் இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையும், சுப யோகங்களின் உருவாக்கவும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும்

மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் தொழிலில் அதிக பணம் ஈட்டுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த காலத்தில் முன்பை விட கடினமாக உழைத்து புதிய உயரங்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணவரவு அதிகரிப்பதுடன் புதிதாக ஏதாவது செய்து ஆதாயம் அடைவீர்கள். பணி இடத்தில் மேல் அதிகாரி உங்கள் பணிகளால் மகிழ்ந்து பாராட்டுவார். இதனால் உங்கள் பணியில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்

கடகம் (Cancer): நன்மதிப்பு அதிகரிக்கும்

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சுப கிரகங்களின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல பலன்களை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. உங்களது திறமை மற்றும் உழைப்பால் அலுவலகத்தில் அனைவரின் மனதையும் வெல்வீர்கள். உங்கள் மேல் அதிகாரியின் நம்பிக்கையையும் இதயத்தையும் வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகளும் நிறைவேறும்.

கன்னி (Leo): வேலை மாற நல்ல நேரம்

இந்த ராஜயோகங்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த நேரத்தில் சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சாமர்த்தியமான முடிவுகளை எடுப்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

விருச்சிகம் (Scorpio): வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் சூரியன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் ஆளுமை மேம்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் புதிதாக முயற்சி செய்ய நினைத்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டிய நேரம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

மீனம் (Pisces): வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மீன ராசிக்காரர்கள் சுப கிரகங்களின் சேர்க்கையால் வருமானத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இப்போது பெறுவீர்கள். உங்கள் தொழிலில் பெரிய வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும். வெற்றி உங்கள் கால்களை முத்தமிடும். உங்கள் நிதி வளம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News