செவ்வாய், புதன் மாற்றம்: சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கோ வீழ்ச்சி, முழு ராசிபலன் இதோ

Mars Mercury Transit: செவ்வாய், புதன் ஆகிய இரு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் அளிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2022, 06:14 PM IST
  • மீன ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் இருக்கும்.
  • கல்விப் பணிகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
  • இடையூறுகள் வரக்கூடும்.
செவ்வாய், புதன் மாற்றம்: சிலருக்கு மகிழ்ச்சி, சிலருக்கோ வீழ்ச்சி, முழு ராசிபலன் இதோ title=

நாளை அதாவது நவம்பர் 13ஆம் தேதி செவ்வாயும், புதனும் ராசி மாறப் போகின்றன. செவ்வாய் வக்ர நிலையில் உள்ளது. செவ்வாய் ரிஷப ராசியிலும், புதன் விருச்சிக ராசியிலும் பிரவேசிப்பார்கள். செவ்வாய், புதன் ஆகிய இரு பெரிய கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் அளிக்கும். 

ஜோதிடத்தில் செவ்வாய்க்கும் புதனுக்கும் தனி இடம் உண்டு. செவ்வாய் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் தளபதி என்று கூறப்படுகிறது. செவ்வாய் ஆற்றல், சகோதரத்தன்மை, நிலம், வலிமை, தைரியம், வீரம் ஆகியவற்றின் காரக கிரகம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிரகம் மேஷம் மற்றும் விருச்சிகத்தின் அதிபதியாக உள்ளது. இது மகர ராசியில் உச்சமாகவும் கடகத்தில் நீச்சமாகவும் உள்ளது. 

புதன், கிரகங்களின் இளவரசர் என்றும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் மற்றும் புதன் ராசிகள் மாறுவதால் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளிலும் என்னென்ன தாக்கம் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  

மேஷம் - கல்வி அல்லது அறிவுசார் வேலைகளில் மரியாதை அடைவீர்கள். மன அமைதி ஏற்படும். திடீர் செல்வம் வர வாய்ப்பு உண்டு. மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தாயின் பாசம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

ரிஷபம் - உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆனால் குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடும். பொருள் இன்பம் விரிவடையும். தந்தைக்கு உடல் நலக் குறைபாடுகள் இருக்கலாம். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் மனதில் எதிர்மறை தாக்கத்தை தவிர்க்கவும். மன அமைதிக்காக பாடுபடுங்கள். தொழில் நிலை மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள் தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

கடகம் - மனம் அமைதியின்றி இருக்கும். நம்பிக்கை குறைவு ஏற்படும். தன்னிறைவாக இருங்கள். தேவையற்ற சண்டைகள் போன்றவற்றை தவிர்க்கவும். வயதானவர்களிடம் நன்றாக பழகுங்கள். கலை, இசையில் நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம்.

மேலும் படிக்க | ஜனவரியில் சனிப்பெயர்ச்சி: எந்த ராசிகளுக்கு எழுச்சி? யாருக்கு வீழ்ச்சி? நிவாரணம் என்ன? 

சிம்மம் ராசி - தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். கல்விப் பணிகளில் வெற்றி உண்டாகும். அறிவார்ந்த வேலையில் மரியாதை அடைய முடியும். முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் பொறுமையின்மையும் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் பலன் அடையலாம். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறும்.

கன்னி - மனம் அமைதியின்றி இருக்கும். அமைதியாய் இருக்க அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். சொத்து பராமரிப்புக்கான செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

துலாம் ராசி - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதால் செலவுகள் கூடும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்படலாம். வருமானத்திலும் அதிகரிப்பு ஏற்படலாம்.

விருச்சிகம் - பொறுமையாக இருங்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படலாம். வருமானம் மேம்படும். தாயின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு - தன்னடக்கத்துடன் இருங்கள். கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவையும் பெறலாம். குடும்ப பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யும். உத்தியோகத்தில் உயர்வு கூடும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். மனம் சஞ்சலமாக இருக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.

மகரம் - பேச்சில் இனிமை இருக்கும், ஆனால் பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம்பிக்கை குறைவு ஏற்படும். தாயாருக்கு உடல்நலக் கோளாறு இருக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் சிரமங்கள் ஏற்படலாம்.

கும்பம் - செவ்வாய் மற்றும் புதனின் மாற்றத்தால் மனம் நல்ல நிலையில் இருக்கும். செலவுகள் கூடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள் இருக்கலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் இருக்கும். கல்விப் பணிகளில் எச்சரிக்கையாக இருங்கள். இடையூறுகள் வரக்கூடும். வியாபாரத்தில் நண்பரின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் மென்மை இருக்கும். இன்னும் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். கல்விப் பணிகளுக்கு மகிழ்ச்சியான பலன் கிடைக்கும். சுற்றுலா செல்க்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 6 ராசிக்காரர்களுக்கு தனலாபத்தைக் கொடுக்கும் செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News