ரிஷபத்தில் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு.. லாபமோ லாபம்

Budhaditya Yogam: புத ஆதித்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு இதன் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 12, 2023, 01:01 PM IST
  • புதாதித்ய யோகம் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • சூரியன்-புதன் இணைவு இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ யோகத்தை உருவாக்குகிறது.
  • இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபத்தில் புத ஆதித்ய யோகம்: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு.. லாபமோ லாபம் title=

புதன் சூரியன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் அரசனான சூரியன் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். ஜூன் 15, 2023 வரை அவர் இந்த ராசியில்தான் இருப்பார். மறுபுறம், ஜூன் 7, 2023 அன்று, கிரகங்களின் அதிபதியான புதனும் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். இதன் காரணமாக ரிஷப ராசியில் புதனும் சூரியனும் இணைந்திருப்பதால் புத ஆதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புத ஆதித்ய ராஜயோகம் வெற்றி, மரியாதை, செல்வம் மற்றும் புகழைக் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. 

ஜூன் 15, 2023 வரை, அதாவது சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் வரை, இந்த புதாதித்ய யோகம் இருந்து அனைத்து ராசிக்காரர்கள் மீதும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும். புத ஆதித்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு இதன் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் எதிர்பாராத பல நல்ல செய்திகள் கிடைக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான நற்பலன்கள் கிடைக்கும்: 

ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் 4 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு அடுத்த 3 நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்கள் தொழில், வியாபாரத்தில் பல நன்மைகளைப் பெறுவார்கள். வெற்றி, செல்வம் மற்றும் புகழ் இவர்களைத் தேடி வரும். 

ரிஷப ராசி: 

சூரியனும் புதனும் ரிஷப ராசியில் சஞ்சரித்து சேர்வதால், புத ஆதித்ய யோகம் இந்த ராசியில்தான் உருவாகிறது. இது ரிஷப ராசிக்காரர்கள் மீது ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களுக்கு இப்போது பல வித சலுகைகள் கிடைக்கும். அலுவலக பணிகளில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பதவிகளும், பொறுப்புகளும் கூடும். ஒன்றன் பின் ஒன்றாக பல வெற்றிகள் உங்களை தேடி வரும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தால் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

மேலும் படிக்க | 5 நாட்களில் சனியால் சச மகா யோகம், பத்திர யோகம்; இந்த 6 ராசிர்களின் ஜாக்பாட்

மிதுன ராசி:

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் இவர்களுக்கும் புத ஆதித்ய ராஜயோகத்தின் பலன்களை அளிப்பார். இவர்கள் வெளிநாட்டில் இருந்து பண ஆதாயம் அடைவார்கள். வெளி நாடுகளுடன் தொடர்புடைய தொழில் அல்லது வேலை செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகத்தில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும்.

கடக ராசி:

புதாதித்ய யோகம் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். சூரியன்-புதன் இணைவு இந்த ராசிக்காரர்களுக்கு செல்வ யோகத்தை உருவாக்குகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். ஆனால், இவை சுபச்செலவுகளாகவே இருக்கும். மேலும், இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும் என்பதால், உங்களுக்கு நிதி நெருக்கடியோ, அல்லது பணத்தால் ஏதாவது பிரச்சனையோ ஏற்படாது. 

கும்ப ராசி:

புதாதித்ய யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆதாயம் அடைவார்கள். இந்த காலத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்யும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவார்கள். பெரிய நன்மைகளைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வருமானம் பெருகும்..திருப்பங்கள் ஏற்படும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News