சூரியன்-புதன் சேர்க்கை: புத ஆதித்ய யோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்பம் சூழும்

Budhaditya Yogam: புதாதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், முதலீட்டில் லாபம், மதிப்பு, மரியாதை கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 9, 2023, 11:49 AM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தரும் வகையிலும் இருக்கும்.
  • சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
  • இந்த நேரத்தில் உங்கள் மரியாதையும் மதிப்பும் மிகவும் அதிகரிக்கும்.
சூரியன்-புதன் சேர்க்கை: புத ஆதித்ய யோகத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், இன்பம் சூழும் title=

மகர ராசியில் உருவாகும் புத ஆதித்ய யோகம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் இயக்கத்தை மாற்றுகிறது. இப்படிப்பட்ட கிரக மாற்றங்களும், கிரங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. 

பிப்ரவரி 07ஆம் தேதி புதன் கிரகம் மகர ராசிக்குள் பிரவேசித்துள்ளது. ஏற்கனவே மகர ராசியில் சூரியன் இருப்பதால், புதன் மற்றும் சூரியன் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக புத ஆதித்ய யோகம் உருவானது. ஜோதிடத்தில், இந்த புதாதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம், முதலீட்டில் லாபம், மதிப்பு, மரியாதை கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

விருச்சிகம்

புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் அதிகப்படியான பலன்களை அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். விருச்சிக ராசிக்கு மூன்றாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. அரசியலுடன் தொடர்புடைய இந்த ராசிக்காரர்கள் சில பதவிகளைப் பெறலாம். 

அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சூரிய பகவான் மூன்றாவது வீட்டில் வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்த காலகட்டத்தில் முதலீட்டில் இருந்து லாபம் கிடைக்கும். இதுமட்டுமின்றி, தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.
   
மேலும் படிக்க | இன்றைய ராசிப்பலன்: பண மழையில் நனையப்போகும் ராசிகள்!

சிம்மம் 

ஜோதிட சாஸ்திரப்படி, சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தரும் வகையிலும் இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். 

மேலும், இந்த நேரத்தில் உங்கள் மரியாதையும் மதிப்பும் மிகவும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அலுவலக பணியில் இருப்பவர்கள் அதிக பொறுப்பை பெறக்கூடும். இதனுடன், சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலத்தில் காதல் விவகாரங்களிலும் வெற்றி பெறலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம் மிக சாதகமாக அமையும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இந்த யோகம் அமையப் போகிறது. இந்த வீட்டில் சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால் நீதிமன்ற வழக்குகள் இருந்தால், அவற்றில் வெற்றி பெறுவீர்கள். 

மகரராசிக்காரர்களை வாட்டி வதைத்து வந்த பழைய நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி எதிரிகளை வெற்றி கொள்வதிலும் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இந்த காலம் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News