நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்

Mercury Transit 2023 Febrauary 7: சனியின் ராசியான மகர ராசியில் புதன் நுழைவது அனைத்து மக்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 7, 2023, 07:36 AM IST
  • மேஷ ராசிக்காரரக்ளுக்கு முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்
  • கடக ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும், நிதி நிலை சிறப்பாக இருக்கும்
  • குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிக்கும் கன்னி ராசியினர்
நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம் title=

Budh Gochar Feb 7கிரகங்களின் இளவரசன் புதன் 2023 பிப்ரவரி ஏழாம் தேதியன்று மகர ராசிக்கு பெயர்கிறார். புதனின் ராசிப் பெயர்ச்சி 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்களின் தொழில் மற்றும் நிதி நிலைமையில் புதன் மாற்றம் சுப பலன்களைத் தரும்.நாளை, பிப்ரவரி 7, 2023 அன்று, சனியின் ராசியான மகர ராசியில் புதன் நுழைந்துவிட்டார். சனியின் ராசியான மகர ராசியில் புதன் நுழைவது அனைத்து மக்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பிப்ரவரி 7 ஆம் தேதி, சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைவார். இந்த புதனின் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதுடன், வாழ்வில் பல வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். புதனின் இன்றைய சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு  அருமையான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

மங்களத்தை அள்ளித்தரும் புதனின் சஞ்சாரம் மங்களகரமானதாக இருக்கும். மங்கலத்தை அருளும் ஞானக்காரகனால், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் என ஐந்து ராசிகள் சுபபலன்கள் பெற்று நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்.  

மேஷம்:தன் சஞ்சாரத்தின் சுப பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும். இந்தப் பெயர்ச்சி இந்த ராசிக்கு பத்தாம் வீட்டில் நிகழப் போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும், இதனால் பணியிடத்தில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்ல உறவு மேம்படும். குடும்பத்தினருடன் உறவு மேம்படும். இது தவிர, வேலை செய்பவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களும் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

ரிஷபம்

இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் புதன் பெயர்ச்சி நடப்பதால், நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப் பெறலாம். அதே சமயம் முதலீடுகளும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு சரியான காலம் இது. மேற்படிப்பு பற்றி யோசிப்பவர்களுக்கும் இந்த நேரம் சரியானதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மகரத்தில் நுழையும் புதன்! அளவில்லாத செல்வத்தையும் வளத்தையும் பெற உள்ள ‘6’ ராசிகள்!

கடகம்

ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த புதன் பெயர்ச்சி இந்த ராசிக்கு ஏழாவது வீட்டில் நடக்கும். வணிக கூட்டாளருடனான உறவுகள் மேம்படும். தொழிலில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அந்த சிக்கலை தீர்க்க சாதகமான காலம் இது. எல்லாத் துறையிலும் வெற்றி கிடைக்கும்.  வாழ்க்கை துணையுடன் உறவும் மேம்படும். இந்த நேரம் காதல் உறவுகளுக்கும் நல்லதாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசியின் ஐந்தாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில், குழந்தைகளுடனான உறவும் மேம்படும் மற்றும் சில நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். புதனின் பெயர்ச்சியால் காதல் கைகூடும், குடும்பத்தில் இனிமை கூடும்.  

துலாம்

துலாம் ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் அதாவது தாயாரின் ஸ்தானத்தில் நடைபெறும் இன்றைய புதன் பெயர்ச்சியால், துலாம் ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும். நேரம் சாதகமாக இருக்கும். செயல்களின் பலத்தால் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. குடும்பம், வேலை மற்றும் வியாபாரத்தை முன்னேற்றும்படியான வேலைகளை செய்யும் காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் உறவு மேம்படும். புதிய வாகனம் மற்றும் சொத்து போன்றவற்றை வாங்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News