யார் உத்வேகமாக பணியாற்றலாம்? எவர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன்...

Astrology Predictions On Feb 5, 2024: இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா? யார் உத்வேகமாக பணியாற்றலாம்? எவர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2024, 06:01 AM IST
  • மனதில் உற்சாகம் பொங்கும் நாள்
  • சிம்மத்திற்கு கொஞ்சம் எச்சரிக்கை அவசியம்
  • மிதுனத்திற்கு ஆனந்தம் கேரண்டி
யார் உத்வேகமாக பணியாற்றலாம்? எவர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன்... title=

 

Rasipalan: ஜோதிடத்தின்படி, அனைத்து இராசிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு நாளைத் தொடங்கினால் அது இயல்பான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ராசிபலன்  05-02-2024 - சோபகிருது, தை 22  

மேஷ ராசிபலன்

உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பொங்கும் நாளாக இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாகும். பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்புகளின் முக்கியத்துவத்தை உணரும் நாள். 

ரிஷப ராசிபலன்

எதிர்பாராத சந்திப்புகள் பலன் தரும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் மனநிம்மதி வேண்டும் என்றால் புரிதலும் விட்டுக் கொடுத்துச் செல்வதும் அவசியம் என்ற சிந்தனை தோன்றும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடின உழைப்பு என்பது என்றென்றும் நீடிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். 

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

மிதுன ராசிபலன்

மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். குடும்பத்தின் தேவைகள் அதிகரிப்பது, பொறுப்பை அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

கடக ராசிபலன்

பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகத்துடன் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மனதில் புதுவிதமான உற்சாகம் உருவாகும், ஆரோக்கியம் மேம்படும் நாள்

சிம்ம ராசிபலன்

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும், அது தொடர்பான புரிதல் வருவது அவசியம். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சிவ வழிபாடு நல்லது செய்யும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  

கன்னி ராசிபலன்

கலைத் துறையில் மற்றும் கலை சார்ந்த துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியில் இருந்துவந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும்.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

துலாம் ராசிபலன்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாவது உற்சாகத்தை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிபலன்

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். புதிய வாய்ப்பு கிடைப்பதால், இதுவரை இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்

தனுசு ராசிபலன்

தோற்றப் பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவது நல்லது. எதிர்மறையான அனுபவங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதால் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம். 

மகர ராசிபலன்

நெருக்கமானவர்களின் சந்திப்பு மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேற்றுமொழி பிரபலங்களின் அறிமுகம் ஏற்படும். முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.  

கும்ப ராசிபலன்

சுபகாரியங்களால் மனம் மகிழும், தனவரவு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். ஆடை சேர்க்கை உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்

மீனம் ராசிபலன்

விழிப்புடன் செயல்பட்டடல், பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் என்றாலும், அவர்களை சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும். அடக்கமாகவும் சமநிலையாகவும் இருங்கள். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், மனதில் அமைதி நிலவ குலதெய்வ வழிபாடு அவசியம்.

மேலும் படிக்க | மகரத்தில் அஸ்தமனமாகும் புதன்... நெருக்கடிகளை சந்திக்க போகும் சில ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News