மெட்ரோவில் ஒலித்த ‘தையா தையா’... ஷாருக்கான் போல் ஆடி இணையத்தை கலக்கிய நபர்!

டெல்லி மெட்ரோவில் நடந்த வேடிக்கைகள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது லண்டன் மெட்ரோவில் ஷாருக்கானின் பாடலுக்கு ஆடி கலக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2023, 04:32 PM IST
  • மெட்ரோவில் நடனமாடி அசத்திய நபர்.
  • வைரலாகி வரும் இன்ஸ்டாகிராம் வீடியோ.
  • நெரிசல் மிகுந்த மெட்ரோவில் அவர் ஆடுவது போல் எல்லோராலும் நிச்சயமாக ஆட முடியாது.
மெட்ரோவில் ஒலித்த ‘தையா தையா’... ஷாருக்கான் போல் ஆடி இணையத்தை கலக்கிய நபர்! title=

மெட்ரோ வைரல் வீடியோ: நடனம் மற்றும் பாடல், பேஷன் ஷோக்கள் முதல் விவாதங்கள் மற்றும் சண்டைகள் வரை டெல்லி மெட்ரோவில் நடந்து வைரலான் பல விஷயங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் சமீபத்திய வைரல் வீடியோ லண்டன் மெட்ரோவில் நடந்த சம்பவம் தொடர்பானது. அதில் ஒரு நபர் தனது இசைக்கு நடனமாடுவதைக் காணலாம். உடையிலும் தோற்றத்திலும் இந்தியர் போல் தெரிகிறது. அந்த நபரின் தன்னம்பிக்கை அலாதியானது என்பது சிறப்பு. நெரிசல் மிகுந்த மெட்ரோவில் அவர் ஆடுவது போல் எல்லோராலும் நிச்சயமாக ஆட முடியாது. ஏனென்றால் இந்தியாவில் இது பொதுவான விஷயம். ஆனால் வெளிநாடுகளில் பெரும்பாலான மக்கள் விதிகளை கடைபிடிக்கின்றனர். பொது வெளியில் மக்கள் அனைவரும் தங்கள் வேலை உண்டு தான் உண்டு என நடந்து கொள்வார்கள்.

லண்டன் மெட்ரோ நடன வீடியோ

வைரலான கிளிப்பில், அந்த நபர் தனது இடத்தில் இருந்து மெதுவாக எழுந்து நடனமாடத் தொடங்குவதைக் காணலாம். மெட்ரோவிற்குள்ளும், வெளியிலும், ஒரு மாலுக்கு முன்பும் அதே அசைவுகளை காட்டி நடனம் ஆடுகிறார். அவர் தன்னை மறந்து பாட்டில் லயித்து ஆடுகிறார். ஆனால், ரயிலில் உள்ளே அமர்ந்திருந்தவர்கள் அவரது செயலால் சிறிதும் கவனம் சிதறியதாகவே தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். இதையும் மீறி, ஷாருக் கானின் உயிரே படத்தில் வரும் சைய்ய - சைய்ய சைய்யான்  பாடலுக்கு காதுகளில் ஹெட்ஃபோனை வைத்துக் கொண்டு அந்த நபர் நடனமாடுகிறார். நடனத்தை முடித்துவிட்டு அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்தார். ஷாருக்கான் இந்த படத்தில் சைய்யா சைய்யா பாட்டிற்கு ரயில் மீது தான் நடனமாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் மெட்ரோ நடன வீடியோவை இங்கே கண்டு ரசிக்கலாம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @zanethad

 

அடுத்த முறை 'சகி-சகி' பாட்டுக்கு நடனம் ஆடுங்கள்: இணைய ரசிகர்கள் கோரிக்கை

இந்த இடுகை செப்டம்பர் 7 அன்று Instagram இல் (@zanethad) என்ற கணக்கின் மூலம் வெளியிடப்பட்டது. இந்த செய்தியை எழுதும் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், சுமார் 6 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில், பயனர்கள் தங்கள் கருத்துக்களைக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஒருவர் இதற்கு பதிவ்வுள்ள கருத்தில் - உங்கள் அசாத்திய நம்பிக்கைக்கு வணக்கம். எனினும் மற்றொருவர் பதிவிட்டுள்ள கருத்தில் -  பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், மற்றொரு பயனர் கூறினார் - அண்ணா, அடுத்த முறை 'சாகி-சாகி' என்ற பாட்டுக்கு நடனமாடுங்கள். எனினும் பெரும்பாலான மக்கள் வைரலான கிளிப்பைப் பார்த்து வியந்து ரசிக்கிறார்கள். 

மேலும் படிக்க | லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்

இதே போன்று சில நாட்களுக்கு முன், திருமணத்தின் போது மணமக்கள் ஆடிய வீடியோ வைரல் ஆகியது. சல்மான் கான் மற்றும் சுஷ்மிதா சென் இணைந்து நடித்த "பிவி நம்பர் 1" என்ற இந்தி படத்தில் வரும் "சுன்னரி சுன்னனரி" என்ற கிளாசிக் பாடலுக்கு மணமக்கள் அட்டகாசமாக நடனம் ஆடியது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்தது. இந்த அற்புதமான நடனத்தை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். மணமக்களின் அட்டகாசமான நடன வீடியோவை உள்ள இணைப்பில் காணலாம்:

மேலும் படிக்க | குத்தாட்டம் போட்டு இணையத்தை தெறிக்கவிட்ட புதுமண ஜோடி... சான்சே இல்ல: வைரல் வீடியோ!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News