ஆட்டோவுக்கு யானை கேட் போட்டதால் வசமாக சிக்கிய சுற்றுலாபயணிகள்: வைரல் வீடியோ

வனப்பகுதி வழியே சென்ற  ஆட்டோ ஒன்றை யானை வழிமறித்து தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஆட்டோக்குள் இருந்தவர்கள் பயந்து இருந்த நிலையில், சிறிது நேரத்தில் யானை திரும்பிச் சென்றது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2023, 08:10 PM IST
  • சாலையின் குறுக்கே சென்ற யானை
  • வசமாக சிக்கிய சுற்றுலா பயணிகள்
  • திடீரென தாக்கியதால் அதிர்ச்சி
ஆட்டோவுக்கு யானை கேட் போட்டதால் வசமாக சிக்கிய சுற்றுலாபயணிகள்: வைரல் வீடியோ title=

வனப்பகுதி வழியே செல்லும் சாலையில் எப்போதும் கவனத்துடன் தான் செல்ல வேண்டும். எந்நேரத்திலும் வன விலங்குகள் திடீரென சாலையில் குறுக்கிடும் வாய்ப்பு இருக்கிறது. அதனுடைய மன நிலை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் சொல்ல முடியாது. சாந்தமாக இருந்தால் சாலையில் இருந்து அப்படியே மீண்டும் வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் சென்றுவிடும். கொஞ்சம் பசியாக இருந்தால் அந்த நேரத்தில் ஆக்ரோஷமாக இருக்கும். அந்த நேரத்தில் யார் குறுக்கிட்டாலும் வன விலங்குகள் தாக்க வாய்ப்பு இருக்கிறது.  மான் உள்ளிட்டவை வேகமாக சாலையை கடந்து ஓடிவிடும். புலி, சிங்கம், கரடி மற்றும் யானைகள்  தான் அடிக்கடி வனப்பகுதிக்குள் இருக்கும் சாலை ஓரத்தில் தஞ்சமிடும்.

மேலும் படிக்க | விமானத்தின் கழிவறையில் உடலுறவு கொண்ட ஜோடி! கையும்களவுமாக சிக்கிய வீடியோ!

அப்போது வாகனங்கள் ஏதேனும் வந்தால் தங்களுக்கான உணவு கிடைக்கிறதா? என்பதை தான் முதலில் சோதனையிடும். கரும்பு உள்ளிட்டவை இருந்தால் நிச்சயமாக அந்த லாரிகளை யானைகள் வட்டமிட்டுவிடும். முடிந்தளவுக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு சாப்பிட முயற்சி செய்யும். ஏதும் கிடைக்கவில்லை என்று தோன்றிவிட்டால் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்க தொடங்கிவிடும். அதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக எந்த வாகனத்தையும் வழி மறிக்கும் ஒரு விலங்கு என்றால் அது யானை தான். அது தான் அடிக்கடி சாலைகளில் முகாமிடும். அப்படி முகாமிடும்போது சில நேரங்களில் அமைதியாக கடந்து சென்றாலும் பல நேரங்களில் தன்னுடைய முரட்டு தனத்தையும் காட்டிவிடும். அந்தவகையில், யானையிடம் சிக்கிய ஆட்டோ ஒன்றின் வீடியோ தான் இப்போது யூடியூப்பில் வைரலாகியுள்ளது.

யூடியூப்பில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், வனப்பகுதியில் ஆட்டோ வருகிறது. திடீரென சாலையின் குறுக்கே வரும் யானை ஆட்டோவை வழி மறிக்கிறது. பின்னர் ஆட்டோவை தன்னுடைய மிகப்பெரிய தந்தத்தால் தாக்குகிறது. தலைகீழாக கவிழ்க்க முயற்சி செய்கிறது. அப்போது ஆட்டோவுக்குள் இருந்தவர்கள் எல்லாம் பயத்தின் உச்சத்தில் இருக்க, என்ன நினைத்ததோ தெரியவில்லை யானை திடீரென அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த வீடியோ இப்போது யூ டியூப்பில் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. The Elephant என்ற யூ டியூப் பக்கத்தில் 6 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ 49 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகள் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | வச்ச குறி தப்பிடுச்சே பங்கு? ஆர்வக் கோளாறில் தப்பான முதலையின் குறி! இரை போச்சே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News