Plane Swap வீடியோ: உயிரை பறிக்கவிருந்த வான் சாகசம்: தப்பிப் பிழைத்த விமானிகள்

பார்த்தாலே பரவசமாகும் வீடியோக்களுக்கு மத்தியில் விமான விபத்து ஒன்றின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும் ஆறுதலையும் தருகிறது. விமானம் விபத்துக்குள்ளானாலும் உயிர் சேதம் இல்லை என்பதால் ஆறுதல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 26, 2022, 11:58 PM IST
  • அதிர்ச்சியும் அசுவாசமும் தரும் விமான விபத்து வீடியோ
  • சாகசம் செய்ய முயன்ற விமானிகளின் வீடியோ
  • விமானம் விபத்துக்குள்ளானான வீடியோ வைரல்
Plane Swap வீடியோ: உயிரை பறிக்கவிருந்த வான் சாகசம்: தப்பிப் பிழைத்த விமானிகள் title=

வானத்தில் சாகசம் செய்ய விரும்பிய ஸ்டண்ட் விபத்தில் முடிந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.

ரெட்புல் ‘பிளேன் ஸ்வாப்’ ஸ்டண்ட் செய்வதை பார்க்கும்போதே திரில்லிங்காக இருக்கிறது. அந்த சாகசத்தில் ஈடுபட்டவர்களின் அந்த நொடி மனநிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நடுவானில் தங்கள் விமானங்களில் இருந்த இரண்டு விமானிகளும் ஒருவர், மற்றொருவரின் விமானத்தில் குதிக்க முயன்றனர், இறுதியில் அந்த சாகசத்தில் ஒரு பகுதி தான் நடைபெற்றது இருவரும் உயிர் பிழைத்ததே நிம்மதியாக இருக்கிறது. அந்த த்ரில்லிங் வீடியோ பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

நடுவானில் சாகசம் செய்ய முயன்றபோது அதில் ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதை அடுத்து சாகச முயற்சி முழுமையாக முடியவில்லை.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிம்மதியும் கலந்து கொடுக்கும் வீடியோ இது....

ஞாயிற்றுக்கிழமையன்று (2022, ஏப்ரல் 24) அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ரெட்புல் நிதியுதவி செய்த ஸ்டண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரெட்புல் விமானப்படை விமானக் குழுவில் இருந்த ஸ்கைடைவர்கள் இருவரும் லூக் அய்கின்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

மேலும் படிக்க | கூண்டுக்குள்ள இருந்தாலும் நான் தான் ராஜா 

இருவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. இவ்வளவு பெரிய விபத்து நடைபெற்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

இந்த ட்ரெண்டிங் வீடியோ பற்றி ரெட்புல் அவர்களின் இணையதளத்தில் இந்த ஸ்டண்ட் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளது. “ஏப்ரல் 24, ஞாயிற்றுக்கிழமை, லூக் அய்கின்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் ஆகியோர் தங்கள் விமானங்களில் இருந்து அடுத்த விமானத்திற்கு செல்ல முயற்சிக்கின்றனர்.

ஆனால் அது நடைபெறவில்லை. திட்டமிட்டபடி நடந்திருந்தால் ஒரு விமானத்தில் புறப்பட்டு மற்றொரு விமானத்தில் தரையிறங்கிய முதல் விமானிகள் என்ற வரலாற்றில் இடம்பிடிப்பார்கள்.! ”

மேலும் படிக்க | உருண்டு புரண்டு டான்ஸ் ஆடி சூப்பராய் வீடியோ எடுக்கும் சூப்பர் சிறுவன்

வைரலான விமானத்தில் இருக்கும் விமானிகள் இருவரும் வானத்தில் காற்றில் 12,100 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது குதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐகின்ஸ் தனது உறவினரின் விமானத்தில் வெற்றிகரமாக குதித்துவிட்டார்.

ஆனால், ஃபாரிங்டனால் மற்றொரு விமானத்திற்கு செல்ல முடியவில்லை. இருப்பினும், அவர் தனது பாராசூட்டை பயன்படுத்தி பாதுகாப்பாக தரையிறங்கினார்.
இந்த வீடியோ பார்ப்பவர்களை மயிர் கூச்செறியச் செய்கிறது. 

மேலும் படிக்க | சிங்கிளா வந்து கூட்டுக்குள்ள சிக்கிக் கொண்ட ராஜா: சிங்கத்தை ரெய்ட் செய்யும் புலிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News