நரி வலையில் சிக்கிய குட்டி மான்: துடிதுடித்து காப்பாற்றிய தாய் மான்: வைரல் வீடியோ

வனப்பகுதியில் நரி ஒன்று குட்டி மானை வேட்டையாடும்போது தாய் மான் வந்து அதனை காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. பாசப் போராட்டத்தில் அதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 10, 2023, 09:59 PM IST
  • மானின் வீடியோ வைரல்
  • நரியை துரத்தியடிக்கிறது
  • போராடி குட்டியை மீட்டது
நரி வலையில் சிக்கிய குட்டி மான்: துடிதுடித்து காப்பாற்றிய தாய் மான்: வைரல் வீடியோ title=

போராட்டம் நிறைந்த வாழ்க்கையில் உயிரை காப்பாற்ற தினமும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு விலங்கினம் என்றால் அது மான் தான். அவை மாமிச விலங்குகளிடம் இருந்து தினம்தோறும் காப்பாற்றிக் கொள்ள மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அந்த துன்பமான வாழ்க்கையிலும் மானின் பாசத்தை சில அரிதான இடங்களில் காண முடியும். ஒரு வீடியோவில் மான் குட்டியை புலி வேட்டையாட வரும்போது, குட்டியை காப்பாற்ற தாய் மான் தன்னை பலி கொடுத்துக் கொள்ளும். புலி தாயை மானை வேட்டையாடிச் செல்லும்.

இன்னொரு இடத்தில் தாய் மான் கிடைக்காத விரக்தியில் புலி இருந்தாலும் அங்கிருக்கும் குட்டியை அது ஒன்றும் செய்யாது. இன்னொரு இடத்தில் தண்ணீருக்குள் நீந்தி அக்கறைக்கு செல்லும்போது குட்டி மானை வேட்டையாட முதலை அதிவேகமாக வரும். குட்டி மானுக்கு அது தெரியாது. ஆனால் பின்னால் கரையில் இருந்து பார்க்கும் தாய் மானுக்கு, குட்டி மான் வேட்டையாடப்படும் என்பது தெரிந்து மின்னல் வேகத்தில் ஓடி வந்து முதலையிடம் தன்னை பறி கொடுத்துக் கொள்ளும். அப்படியான நெகிழ்ச்சி சம்பவங்களை மான் இனத்திடம் பார்க்க முடியும். சில இடங்களில் வேட்டையில் இருந்து சாதுர்யமாக சில மான்கள் தப்பிக்கும். சில இடங்களில் போராடி வெற்றியும் பெறும்.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

அப்படி மான் போராடி வெற்றிபெறும் வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. நரியின் வேட்டையில் சிக்கிக் கொண்ட மான் குட்டியை தாய் மான் போராடி மீட்டுள்ளது. 47-வினாடிகள் பதிவாகியுள்ள இந்த வீடியோவில், குள்ளநரி ஒன்று ஒரு குட்டி மானை குறிவைத்து கிட்டத்தட்ட இரையாக மாற்றும் நிலையில் இருந்தது. ஆனாலும் மனம் தளராத தாய் மான், தனது குட்டியை பாதுகாக்க வீரியத்துடன் போராடுகிறது. அப்போதுதான் அந்த இடத்தில் ஒரு போர் உருவாகிறது. ஆனால் எப்படியோ தாய் மான் அந்த குள்ள நரியை அங்கிருந்து விரட்டி, தன் குட்டியை பாதுகாத்தது. கீழே அந்த குட்டி மான் துடித்துக் கொண்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.

இந்த வீடியோ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.  கமெண்ட் அடித்த நெட்டிசன்கள், ஆபத்தில் இருக்கும் குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற தாயின் உள்ளுணர்வின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டை காட்டுகிறது என கூறியுள்ளார். காடுகளில், தாய் மான்கள் தங்கள் வாழ்வின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், தங்கள் குட்டிகளை பாதுகாக்கவும் கடினமாக போராடவேண்டிய சூழலை அடிக்கடி எதிர்கொள்கின்றன. இருப்பினும், இந்த குறிப்பிட்ட வீடியோவில் உள்ள தாய் மான்,  வேட்டையாடும் விலங்குக்கு இடம் கொடுக்காமல் கடுமையாக பாதுகாக்கிறது. மான் வேட்டையாடப்படும் வீடியோ, தப்பிக்கும் வீடியோ பார்த்தவர்களுக்கு முதல் முறையாக மான் போராடி வெற்றி பெறும் வீடியோவை பார்க்கும்போது நிச்சயம் வியப்பாக தான் இருக்கிறது. 

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News