வாட்ஸஅப் அப்டேட்: ஸ்பேம் அழைப்புகளை ஈஸியாக தடுக்கும் அம்சம் அறிமுகம்

WhatsAppல் தெரியாத மற்றும் ஸ்பேம் அழைப்புகளால் நீங்கள் சிரமப்பட்டால், அதனை எப்படி தடுப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

 

1 /5

இப்போதெல்லாம் வாட்ஸ்அப்பில் நிறைய மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த அழைப்புகள் வாட்ஸ்அப் யூசர்களை மிகவும் சிரமப்படுத்துகின்றன.   

2 /5

அந்தவகையில், நீங்களும் வாட்ஸ்அப்பில் தெரியாத அழைப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வெறுப்பாக இருந்தால் அதனை எப்படி தடுக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

3 /5

வாட்ஸ்அப்பில் ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் வசதி உள்ளது. WhatsApp செட்டிங்ஸில் இருக்கும் இந்த அம்சம் இதுவரை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் இப்போது தெரிந்து கொண்டு, ஸ்பேம் அழைப்புகளால் ஏற்பட்ட தொந்தரவில் இருந்து விடுபட்டுவிடுங்கள்.  

4 /5

உங்களுக்கு தெரியாத மற்றும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் வகையில் Silence unknown callers அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளை தானாக பில்டர் செய்வதே இதன் வேலை. இந்த அம்சத்தை நீங்கள் இயக்கிய பிறகு, நீங்கள் ஸ்பேம் அழைப்புகளைப் பெற மாட்டீர்கள்.   

5 /5

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். Settingsகளுக்குச் சென்று Privacy என்பதை கிளிக் செய்யவும். Call tab Privacyல் கொடுக்கப்படும், அதை கிளிக் செய்யவும். இங்கு Silence unknown callers என்ற ஆப்ஷன் கிடைக்கும், அதை ஆன் செய்யவும்.