வெறும் வயிற்றில் இந்த இலைகள் போதும்.. பல அற்புதங்களைச் செய்யும்

வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கின்றன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம். 

ஆயுர்வேதத்தில் பல வகையான நோய்களுக்கு பக்கவிளைவு இல்லாமல் மருந்துகள் உள்ளன. மூலிகை தாவரங்கள் நம்முடைய உடல்நலத்தை பேணி பாதுகாக்க உதவுகின்றன. எனவே வெறும் வயிற்றில் இந்த இலைகளை சாப்பிடுவதால் எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கின்றன என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

1 /6

துளசி: காலையில், வெறும்வயிற்றில் துளசி நீரை குடித்து வந்தால், எந்த நோயும் அண்டாது. இதனால், தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும், பார்வை குறைபாடு நீங்கும். 

2 /6

வெற்றிலை: ஒரு சக்திவாய்ந்த வலி நிவாரணி, வெற்றிலை செரிமானத்தை மேம்படுத்துகிறது, முகப்பருவை நீக்குகிறது, பசியை அதிகரிக்கிறது மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது பல்வேறு ஆண்டிசெப்டிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது.  

3 /6

வேப்பிலை: வேப்பிலை மஞ்சள் காமாலை ஆபத்து நீங்குவதுடன், கல்லீரலில் ஏற்படும் தொந்தரவையும் சரி செய்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிக்கும். வயிற்று பூச்சிகள் வெளியேறி, வயிறு சுத்தமாகும்.  

4 /6

கறிவேப்பிலை: சித்த மருத்துவத்தில் கறிவேப்பிலைக்கு தனி இடம் உண்டு. இவை தோலின் நிறத்தையும் பொலிவுடன் வைத்திருக்க உதவுவதுடன், இளநரையையும் தடுக்கும். அதேபோல் இந்த கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறு நீங்கும், ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.  

5 /6

புதினா இலைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில், சில புதினா இலைகள், எலுமிச்சம் சாறு கலந்து அப்படியே இரவு முழுவதும் விட்டுவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்தாலே நம்முடைய வாயில் தோன்றும் துர் நாற்றத்தை குறைக்கும், சருமத்தில் இருக்கும் துளைகளை இருக்கமாக்கும், சருமம் வயதாவதும் தடுக்கப்படுகிறது.  

6 /6

பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.