கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

Blood Sugar Level In Summer: இன்றைய காலக்கட்டத்தில் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நாம் நமது உணவுப் பழக்கத்தை நன்கு கவனித்துக்கொள்வது அவசியம் ஆகும்.

Blood Sugar Level In Summer: உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ள, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை சரியாக பராமரிக்க வேண்டும். அதனுடன் கொளுத்தும் கோடை காலத்தில் மக்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது, எனவே இந்த சுகர் லெவலை கோடைக் காலத்தில் எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.

1 /6

சில சமயங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. இதைத் தவிர்க்க, உங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை நீங்கள் பராமரிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக கோடையில், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறார். ஏனெனில் இவை உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க உதவும்.  

2 /6

உடலை நோய்களில் இருந்து விலக்கி வைத்திருக்க ப்ரோக்கோலி மிகவும் முக்கியமாகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, எனவே இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.  

3 /6

பச்சை பப்பாளி ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை காய்கறி அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் இது உங்களுக்கு பெரிதும் உதவும். மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கி, உங்கள் வயிற்றையும் சுத்தமாக வைத்திருக்கும்.  

4 /6

சியா விதை உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. பல பெரிய நோய்களில் இருந்து உங்களை காக்க இது உதவும். இதில் நார்ச்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இவை செரிமானத்தை பராமரிக்க உதவும். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.  

5 /6

கீரை தினமும் உட்கொண்டால் பல நோய் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்ளலாம். கீரையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயராமல் தடுக்க உதவும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.