Smriti Irani: மாடல் முதல் மத்திய அமைச்சர் வரை… புகைப்படப் பயணம்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வாழ்க்கைப் பயணத்தின் சில தருணங்களின் புகைப்படத் தொகுப்பு இது. மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஸ்மிருதி இரானி, புகழ்பெற்ற தொலைகாட்சி நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றவர். பின்னர், அரசியலில் ஈடுபட்டு, மத்திய அமைச்சராக உயர்ந்திருக்கிறார் திருமதி ஸ்ம்ருதி இரானி.

2000 ஆம் ஆண்டில், ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். டிடி மெட்ரோவில் ஒளிபரப்பான கவிதா என்ற சீரியலிலும் நடித்து பிரபலமானார் ஸ்ம்ருதி இரானி.    
இவையெல்லாம் அறிமுகம் என்றாலும், ஸ்மிருதி இரானியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அவர் மருமகளாக நடித்த, மாமியாரும் ஒரு நாள் மருமகளாக இருந்தவர் தான் (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) என்ற சீரியல் தான் ஸ்மிருதியை உலக அளவில் அடையாளம் காட்டியது. 

Also Read | Watch #VIVOIPL 2021 கலக்கல் பாடல் சமூக ஊடகங்களில் வைரல்

1 /7

தொலைக்காட்சி நடிகையாக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த ஸ்மிருதி இரானி மார்ச் 23 நாளன்று பிறந்தவர்.  துணித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ம்ருதி இரானி, 2019 முதல் மோடியின் 2 வது அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் வகிக்கிறார்.  2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சின்னத்திரையில் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தவர் ஸ்ம்ருதி இரானி   (Pic Courtesy: Instagram/Smriti Irani)

2 /7

ஸ்மிருதி அமேதி தொகுதியைச் சேர்ந்த எம்.பியும்., காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியை தோற்கடித்து 2019 ல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஸ்ம்ருதி. 2003 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த ஸ்ம்ருதி இரானி, 2004 ல் மகாராஷ்டிரா இளைஞர் அணியின் துணைத் தலைவராக பதவி வகித்தார்.  

3 /7

2000 ஆம் ஆண்டில், ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். டிடி மெட்ரோவில் ஒளிபரப்பான கவிதா என்ற சீரியலிலும் நடித்து பிரபலமானார் ஸ்ம்ருதி இரானி.   சிறந்த நடிகைக்கான விருதை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பெற்றவர். இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதை வென்ற சாதனை படைத்துள்ளார் 

4 /7

மிஸ் இந்தியா 1998 என்ற அழகிப் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவர் ஸ்ம்ருதி இரானி.  

5 /7

டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் (School of Open Learning) முதல் ஆண்டு வணிகவியல் (பி.காம்) தேர்வுகளை எழுதினாலும், மூன்று ஆண்டு பட்டப்படிப்பை முடிக்கவில்லை. பின்னர் அவர் இளங்கலை கலை (பிஏ) பட்டம் பெற்றதாக ஸ்ம்ருதி அறிவித்தார்.

6 /7

ஸ்ம்ருதி இரானியின் ஷிபானி பாகி வங்காளத்தை சேர்ந்தவர். தந்தை அஜய் குமார் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பஞ்சாபி. ஸ்ம்ருதி இரானிக்கு இரண்டு தங்கைகள் உண்டு.  

7 /7

மாடலிங் செய்துக் கொண்டிருந்த ஸ்மிருதி இரானி, புகழ்பெற்ற தொலைகாட்சி நடிகையாகவும் பாராட்டுக்களை பெற்றவர். பின்னர், அரசியலில் ஈடுபட்டு, மத்திய அமைச்சராக உயர்ந்திருக்கிறார் திருமதி ஸ்ம்ருதி இரானி.