ஒரு சதத்தில் பல ரெக்கார்டுகளை உடைத்த ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

 

1 /7

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார்.  

2 /7

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தரப்பில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  

3 /7

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் - 100 சதங்களுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி - 80 சதங்களுடன் உள்ளார். இப்போது  48 சதங்களுடன் மூன்றாவது இடத்தை ராகுல் டிராவிட்டுடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார். நான்காவது இடத்தில் சேவாக்/கங்குலி - 38 சதங்களுடன் உள்ளனர்.  

4 /7

இதற்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரோகித் சர்மா.  

5 /7

இந்தப் பட்டியலில் டேவிட் வார்னர் - 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். சச்சின் - 45 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோகித் சர்மா - 43 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கிறிஸ் கெயில் - 42 சதங்களுடன் நான்காவது இடத்திலும், ஜெயசூர்யா - 41 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.  

6 /7

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.  

7 /7

இந்தப் பட்டியலில் 4 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கும் கவாஸ்கருடன் சேர்ந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா