Rinku Singh Apologize: சிக்சர் அடித்ததற்காக மனிப்பு கேட்ட ரிங்கு சிங்

Rinku Singh Apologize: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிக்சர் அடித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் ரிங்கு சிங். 

 

 

1 /8

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்றது. இதில் அதிரடியாக அரைசதம் அடித்தார் ரிங்கு சிங்.  

2 /8

இது அவரின் முதல் சர்வதேச அரைசதம் ஆகும். முதல் பந்து முதலே அதிரடியாக ஆடினார் ரிங்கு சிங்.  

3 /8

அவரின் அதிரடியால் இந்திய அணி 180 ரன்களை எடுக்க முடிந்தது.  ரிங்கு 69 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார்.   

4 /8

மழை குறுக்கிட்ட இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய தென்னாப்பிரிக்கா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.   

5 /8

இப்போட்டியில் முதல் பேட்டிங்கின்போது அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் சிக்சர் அடித்த பந்து ஒன்று ஸ்டாண்டில் இருந்த மீடியா பாக்ஸின் கண்ணாடியை உடைத்தது.   

6 /8

தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 19-வது ஓவரை வீச, இதில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை ரிங்கு விளாசினார்.  

7 /8

முதல் சிக்ஸ் பார்வையாளர்கள் மத்தியில் விழுந்தது. அதைவிட வேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சிக்ஸர் மீடியா பாக்ஸின் கண்ணாடியை உடைத்துள்ளது.  

8 /8

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக, போட்டிக்கு பின் இதுகுறித்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே ரிங்கு அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.