அடுத்த சீசனில் அபார விலைக்கு ஏலம் போகப்போகும் இந்தியாவின் இளம் கிரிக்கெட்டர்கள்

Performing Youngsters In IPL 2023: ஐபிஎல் 2023 இன் இரண்டாம் பாதி தொடங்கியுள்ளது. தேர்வாளர்களின் கவனத்தை பல இந்திய இளைஞர்கள் கவர்ந்திழுக்கின்றானர். இந்தியாவைச் சேர்ந்த ஐந்து சிறந்த செயல்திறன் கொண்ட இளம் பேட்டர்களின்ன் பட்டியல் இது

அடுத்த சீசனில் அபார விலைக்கு ஏலம் போகப்போகும் இந்தியாவின் இளம் கிரிக்கெட்டர்கள் இவர்கள் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

மேலும் படிக்க: ஐபிஎல் போட்டியால் காத்திருக்கும் ஆபத்து! சமாளிக்குமா பிசிசிஐ?

1 /5

7 ஆட்டங்களில் 227 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஐபிஎல் 2023 இன் 37வது போட்டியில்  சிறப்பாக விளையாடினார்., இந்த லீக்கில் சிறந்த இளம் தொடக்க வீரர்களில் ஒருவராக ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். (Image Source: Instagram)

2 /5

திலக் வர்மா கடந்த ஆண்டு அதிக ரன் குவித்தவர். ஏற்கனவே 7 ஆட்டங்களில் 219 ரன்கள் எடுத்துள்ளார். MI பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற வேண்டுமானால் திலக், முக்கியமானவராக இருப்பார். (Image Source: Instagram)

3 /5

லீக்கின் பல்வேறு கட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரின்கு சிங் அருமையாக விளையாடியுள்ளார். 8 ஆட்டங்களில் 251 ரன்களை எடுத்துள்ளார். (Image Source: Instagram)

4 /5

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் அபாரமான ஃபார்மிலும் உள்ளார். 7 ஆட்டங்களில் 40.57 என்ற சராசரியில் 284 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 142.71 என்பது குறிப்பிடத்தக்கது. (Image Source: Instagram)

5 /5

ஐபிஎல் 2023 இன் ரன்களின் அடிப்படையில் முதல் 10 பேட்டர்களில் கெய்க்வாட் உள்ளார். 7 போட்டிகளில், 270 ரன்கள் எடுத்துள்ள கெய்க்வாட், இரண்டு அரைசதங்கள்ளார். டெவோன் கான்வே உடனான கெய்க்வாட்டின் கூட்டு இந்த சீசனில் சென்னை அணி பல போட்டிகளில் வெற்றிகளுக்கு வழி வகுத்துள்ளது.   (Image Source: Instagram)