பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட்.. டாப் நடிகர்களுடன் த்ரிஷா

நடிகை த்ரிஷா, விஜய், அஜித், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்துவரும் நிலையில் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரும் நடிகை த்ரிஷா, தற்போது 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகை த்ரிஷா மிகப் பெரிய ஹீரோக்களுடன் கைகொத்துள்ளார். இந்த படங்களின் விவரத்தை இங்கே காண்போம்.

1 /5

மோகன்லால் - த்ரிஷா மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் 'ராம்' படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. 

2 /5

சிரஞ்சீவி - த்ரிஷா தெலுங்கு இயக்குநர் மல்லிதி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் விஸ்வம்பரா. தற்போது 18 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் நடிகை த்ரிஷா டோலிவுட் மேக ஸ்டாரான சிரஞ்சீவியுடன் பணியாற்றவுள்ளார்.

3 /5

அஜித் - த்ரிஷா 12 ஆண்டுக்கு பிறகு ’விடாமுயற்சி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகை த்ரிஷா மற்றும் அஜித் இணைந்துள்ளனர். இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

4 /5

கமல்ஹாசன் - த்ரிஷா உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷா நடிக்கயுள்ளார்.

5 /5

சல்மான் கான் - த்ரிஷா பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த ’பில்லா’ ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கயுள்ளதாக கூறப்படுகிறது.