திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சர்வதேச ஊடகங்கள்: புகைப்படங்கள்

  • Aug 08, 2018, 14:42 PM IST
1 /10

திமுக தலைவர் கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. அதன் பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். கள்ளக்குடியில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், ஒரு போராளியாக களமிறங்கியதே அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 1961-ல், தி.மு.க.-வில் சேர்ந்த கருணாநிதி, பின்னர் அக்கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு, 1962-ல் அதாவது அடுத்த ஆண்டே எதிர்க்கட்சி தலைவரானார். 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி, ஒரு சக்திவாய்ந்த நிலைக்கு உயர்ந்தார். 1967ல் முதலமைச்சராக இருந்த அண்ணா திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கருணாநிதி முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார். அது முதல் கருணாநிதி வாழ்க்கையில் ஏற்றம் தான்., 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சர் பதவி கருணாநிதியை அலங்கரித்து அழகு பார்த்தது. 957 ஆம் ஆண்டுமுதல்  60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். தமிழக வரலாற்றில் அதிகபட்ச இடங்களில் வெற்றிபெற்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது கருணாநிதி  தலைமையில்தான். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 182 இடங்களில்  தி.மு.க. வெற்றிபெற்றது. 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.

2 /10

தி இந்து: 94 வயதில் திராவிட குடும்பத் தலைவன் மறைந்தார். "1976 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் போது இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் 356-வது சட்டவரைவைத் தேர்ந்தெடுத்தார். அவர் 1957ல் முதல் 13 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார். மற்றும் கூட்டாட்சி உரிமைகளை மூலம் மாநில அரசுகளின் மாநில சுயாட்சி உரிமைகளை மீட்டெடுத்தார். இதன் மூலம் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை உயர்த்துவதற்கான உரிமையைப் பெற்றார். மனோன்மணியம் சுந்தராணரின் கவிதையான "நீராரும் கடலுடுத்த நிலமடந்தை.." பாடலை மாநிலத்திற்கான "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகா" தழுவினார். தி இந்து எழுதியுள்ளது.

3 /10

இந்தியன் எக்ஸ்பிரஸ்: மு. கருணாநிதி எனும் டைட்டன் வெளியேறியது "அக்டோபர் 2016 முதல் சக்கர நாற்காலியில் அமர்ந்து, அரசியலில் இருந்து விலகி இருந்தார் கருணாநிதி. ஆனால் அவர் திராவிட சிந்தனையும், பகுத்தறிவுவாத, நாத்திக அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட்ட அரசியலை அடிப்படையாகக் கொண்டவர். அவரது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலானவை அவர் சினிமா உலகில் இருந்தார். ஒரு ஸ்கிரிப்ட் எழுத்தாளராக அவர் குறைந்தபட்சம் 75 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். "தி எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.

4 /10

டெக்கான் குரோனிக்கல்: திராவிட சூரியன் மறைந்தது தமிழ் நாட்டில் நீண்ட அரசியல் பயணம் செய்தவர். தனது பேச்சால் அனைவரையும் ஈர்த்தவர். தற்போது புகழ்பெற்ற இந்த சூரியன் தனது பொதுவாழ்வின் சகாப்தத்தை முடிவுக்கு வந்தது. ஆசிரியர், எழுத்தாளர் பேச்சாளர், அரசியல் தலைவர், சமூக ஆர்வலர், மக்களுக்கு நீதி என பன்முக திறமை கொண்ட முன்னால் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தாதி 6.10 மணிக்கு காலமானார் என காவேரி மருத்துவமனை அறிவித்தபோது தயக்கமின்றி திராவிட கொள்கைகளை பரப்பிய கலைஞர் எனும் சகாப்தம் முடிவடிந்தது."டெக்கான் குரோனிக்கல்" எழுதியுள்ளது.

5 /10

டெக்கான் ஹெரால்டு: தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லை மு. கருணாநிதி, 14 வயதிலேயே அரசியலுக்கு வந்தார். கருணாநிதி மிகவும் மதிக்கத்தக்க தேசியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். திராவிட சிந்தனைவாதியான பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் சி.என் அண்ணாதுரை ஆகியோரால் அரசியலில் புகழ் பெற்றவன் நான் என்பது கருணாநிதியின் கூற்று.  மு.கருணாநிதி கடைசி நாட்கள் வரை தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1969 ஆம் ஆண்டில் அண்ணாதுரை இறந்த பின்னர், அவரின் வழிகாட்டுதலின் பேரில் திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். 1989 ஆம் ஆண்டு தேசிய முன்னணி கூட்டணியிலும், 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி கூட்டணியிலும் ஒரு முக்கிய பங்கு வகித்தது திமுக. "டெக்கான் ஹெரால்டு எழுதியுள்ளது.

6 /10

இந்துஸ்தான் டைம்ஸ்: திராவிடன் சூரியன் அஸ்தமானது "இந்தியாவின் பழமையான மற்றும் மூத்த அரசியல்வாதி, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) உயர்ந்த தலைவரான கருணாநிதி, தனது 94 வயதில் செவ்வாயன்று காலமானார். தமிழ் மொழி, கலாச்சாரம், கலை, வரலாறு என அவரின் கடந்தகால சாதனைகள் அளவிட முடியாது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வளர்ச்சியடையும் ஒரு முக்கிய துருவமாக மு.கருணாநிதி இருந்தார். திராவிட கருத்தியலில் மிகவும் பற்றுள்ளவராக இருந்தார். "இந்துஸ்தான் டைம்ஸ்" எழுதியுள்ளது.

7 /10

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஒரு சகாப்தம் முடிந்தது. தி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.10 மணியளவில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டபோது, மருத்துவமனைக்கு வெளியே இருந்த திமுக தொண்டர்கள் எழுந்து வா தலைவா... கோபாலபுரம் செல்வோம்... அறிவாலயம் செல்வோம்... என கண்ணீருடன் கோசம் எழுப்பினார்கள். அவரது குடும்பமும் சோகத்துடன், அதற்கான அடையாளங்களும் அவர்களின் முகத்தில் இருந்தபோதிலும், மு. கருணாநிதியை அடக்கம் செய்யும் வேலைகளில் குடும்பம் தயாராகி வருகிறது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" எழுதியுள்ளது..

8 /10

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: திராவிட நிலத்தில் சூரியன் அஸ்தமானது "திராவிட இயக்கத்தில் இளைஞராக இருக்கும் போது தன்னை இணைத்துக்கொண்ட மு. கருணாநிதி அவர்கள் முதலில் இயக்கம், பிறகு தான் குடும்பம் என முழங்கினார். தனக்கு இரண்டு கல்யாணம் மற்றும் ஆறு குழந்தைகள் ஆனா பிறகு மெதுவாக தனது குடும்பம் கட்சியில் அதிகார மையங்களில் வரத்தொடங்கியது. இது அவருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. "டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியுள்ளது.

9 /10

சிஎன்என்: இந்தியாவின் அரசியல் சின்னம் மு. கருணாநிதி 94 வயதில் காலமானார். கலைஞர் என்ற அடைமொழியுடன் பிரபலமான மு. கருணாநிதி 1957 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். பின்னர் அவர் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆமா ஆண்டு அவர் திமுக-வின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். 1969 ஆம் ஆண்டில் அண்ணாதுரை இறந்தபின், தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் கருணாநிதி பதவி ஏற்றார். அவர் தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகளும், ஐந்து முறை மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தார். "CNN" எழுதியுள்ளது.

10 /10

நியூயார்க் டைம்ஸ்: மூத்த தென்னிந்திய அரசியல்வாதி முத்துவேல் கருணாநிதி காலமானார். 1950-களில் தமிழ் திரையுலகில் ஒரு திரைக்கதை எழுத்தராக அறிமுகமாகி, பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1969 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை மாநிலத்தின் முதல்-அமைச்சராக மொத்தம் 19 ஆண்டுகள் அவர் அரசணையில் இருந்தார். 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை வழிநடத்திச் சென்றார். "தி நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது.