சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.. குபேர யோகம் ஆரம்பம்

Shani Vakra Nivarthi: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகின்றது. கிரகங்களின் பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவை அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். ஒவ்வொரு கிரகத்திலும் அவர் அதிக காலத்திற்கு இருப்பதால், அவரது தாக்கமும் கிரகங்களில் அதிகமாக இருக்கும். ஜூன் 17 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் 4 வரை இந்த நிலையில் இருப்பார். அதன் பின் அவர் வக்ர நிவர்த்தி அடைவார். இதனால் அதீத நற்பலன்களை அடையப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /8

சனி பெயர்ச்சி: சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை வருடங்கள் ஆகும். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆனார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். 

2 /8

சனி வக்ர பெயர்ச்சி: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றங்களும் இயக்க மாற்றங்களும் ராசிகள் மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூன் 17 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் 4 வரை இந்த நிலையில் இருப்பார். 

3 /8

சனி வக்ர நிவர்த்தி: தற்போது வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிவர்த்தி ஷஷ மஹாபுருஷ யோகத்தை உருவாக்குகின்றது. இதனால் பலருக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளன.   

4 /8

ராசிகளில் தாக்கம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலங்கள் கிடைக்கும். இவர்களுக்கு செழிப்பு மற்றும் பொன்னான நாட்கள் தொடங்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

5 /8

ரிஷபம்: சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவது நல்ல பலன்களைத் தரும். இந்த நேரத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் உருவாகி இந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இதுமட்டுமின்றி இவர்களுக்கு தொழிலில் பலமான முன்னேற்றம் ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உயர் பதவியையும் சம்பள உயர்வையும் பெறுவீர்கள். 

6 /8

சிம்மம்: ஜோதிட சாஸ்திரப்படி சனியின் வக்ர நிவர்த்தியால் ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் உருவாகும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பலன் தரும். இந்த நேரத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவு வலுப்பெறும். இதுமட்டுமின்றி பொருள் ரீதியான இன்பங்களும் பெருகும். அதே நேரத்தில், பொருளாதார ரீதியாகவும் நன்மைகள் கிடைக்கும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

7 /8

கும்பம்: நவம்பரில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் பல வித நற்பலன்களை அள்ளித்தரும். இந்த காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாலமாக இருக்கும். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் மக்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கூட்டுத்தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.