குரு பெயர்ச்சி பலன் 2024: சித்திரை முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், பொற்காலம்

Guru Peyarchi: வரும் தமிழ் புத்தாண்டு முதல் குரோதி ஆண்டு தொடங்கயுள்ளது, இதன் பிறகு வரும் சித்திரை 18ஆம் தேதி பகல் 1 மணிக்கு குரு மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 

நவகிரகங்களின் குரு பகவான் பொன்னவன் என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன்படி குருபகவான் கடந்த ஆண்டு நிலையாக மேஷ ராசியில் பயணம் செய்தார். இந்த ஆண்டு குரு வளையம் எனப்படும் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். இதனால் எந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி கூடும், அபார வெற்றி கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /7

மேஷம் : குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் குடியேறுகிறார், இது தன, குடும்ப வாக்கு ஸ்தானமாகும். எனவே சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பேச்சுக்கு மரியாதை கிடைக்கும்.  பண வருமானம் கூடும். கடன் தொல்லை தீரும். உத்தியோகத்தில் பதிவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கலாம். திருமணம் சிறப்பாக நடைபெறும்.

2 /7

ரிஷபம் : உங்கள் ராசியில் குரு பெயர்ச்சி அடையப் போவதால் நன்மையான பலனையே நீங்கள் பெறுவீர்கள். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் கைகூடி வரும். குழந்தைகளால் நல்ல செய்தி வரும். கூட்டு தொழில் லாபம் கிடைக்கும். வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

3 /7

மிதுனம் : குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சொந்த வீடு வாங்குவீரகள். கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

4 /7

கடகம்: மே 1ஆம் தேதி நடக்கப் போகும் குரு பெயர்ச்சியால் கடக ராசிக்கு நினைத்தது எல்லாம் நிறைவேறும். வாழ்க்கையில் வெற்றி மீது வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வீட்டில் திருமணம் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்குவார் குரு பகவான்.

5 /7

சிம்மம் : குரு பெயர்ச்சிக்கு பிறகு சிம்ம ராசிக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். பண வரவு வரும். திருமணம் நடைபெறும். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. எதிரிகள் தொல்லையில் இருந்து விடுப்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். 

6 /7

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். இதனால் உங்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது. செல்வாக்கு அதிகரிக்கும். புகழும் கீர்த்தியும் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி தானாகவே வரும். உங்களின் அளவில்லா வெற்றியைக் கண்டு பலரும் ஆச்சரியப்படுவார்கள்.    

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.