திரிகிரஹி யோகம்: சுக்கிரன் மாற்றத்தால் உருவான சுப யோகத்தால் இந்த ராசிகளுக்கு அமோகமான பலன்கள்

சுக்கிரன் ராசி மாற்றம், புத ஆதித்ய யோகம், திரிகிரஹி யோகம்: பஞ்சாங்கத்தின்படி இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி கன்னி ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் இணைந்து திரிகிரஹி யோகத்தை உருவாக்கியுள்ளனர். அதே நேரத்தில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் புத்தாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. இந்த வழியில், கன்னியில் புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் ஒரு மகத்தான சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சில ராசிகளின் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கும். 

1 /4

புத்தாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் பலன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

2 /4

புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய பெரிய யோகங்களால் இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி பொருளாதார நிலை வலுப்பெறும். இந்த நேரத்தில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம்.

3 /4

புதாதித்ய யோகம் மற்றும் திரிகிரஹி யோகத்தின் தாக்கத்தால், விருச்சிக ராசிக்காரர்களின்  வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். சூரியன்-புதன் கிரகங்களின் தாக்கத்தால் சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். வருமானத்துக்கான புதிய வழிகள் பிறக்கும். 

4 /4

இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்க: பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)