கர்நாடகா சுற்றி பார்க்கணுமா.. குறைந்த பட்ஜெட்டில் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் அறிமுகம்

கர்நாடகாவை சுற்றிப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தற்போது ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜின் முழு விவரத்தை இங்கே காண்போம்.

ஐஆர்சிடிசி கர்நாடகா டூர் பேக்கேஜ்: ஆன்மீக சிந்தனை உள்ளவர்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும் பல இடங்கள் கர்நாடகாவில் உள்ளன. அந்த இடங்களை பார்வையிட ஐஆர்சிடிசி டூரிசம் ஒரு சிறப்புத் பேக்கேஜை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

 

1 /6

கர்நாடகா இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலம் மற்றும் அதன் தலைநகரம் பெங்களூரு ஆகும். இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்வார்கள்.  

2 /6

தற்போது ஐஆர்சிடிசி ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.   

3 /6

இந்த டூர் பேக்கேஜின் பெயர் டிவைன் கர்நாடகா (SHA08) ஆகும். வரும் 23 முதல் இந்த டூர் தொடங்கும். மேலும் டூர் பேக்கேஜ் மொத்தம் 5 இரவுகள் 6 பகல்கள் கொண்டது. அதனுடன் இது ஒரு விமானப் பயணத் தொகுப்பாகும்.  

4 /6

இந்த டூர் பேக்கேஜில், தர்மஸ்தலா, கோகர்ணா, ஹொர்நாடு, கொல்லூர், மங்களூர், முருதேஸ்வர், சிருங்கேரி, உடுப்பி போன்ற இடங்களை நீங்கள் பார்வையிட வாய்ப்பை பெறுவீர்கள்.   

5 /6

இதில் தனி நபர் மட்டும் பயணம் செய்தால் 43,800 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு பேருக்கு தலா 34,400 ரூபாயும், மூன்று பேருக்கு தலா 33,050 ரூபாயும் செலுத்த வேண்டும்.  

6 /6

இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்ய விரும்பினால், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( https://www.irctctourism.com/ ) முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.