நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் இருக்க... தேவையான விட்டமின்களும் உணவுகளும்!

Neurological Health: மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக இருக்கின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.

உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கு நரம்பு மண்டலம் அவசியம். நினைவாற்றல், உணர்வுகள், காட்சி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

1 /7

உடலின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கு நரம்பு மண்டலம் அவசியம். இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. இதனால், உடல் நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், நரம்பு தளர்ச்சியை நீக்கும் வைட்டமின்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

2 /7

நரம்புகளின் வலிமைக்கு வைட்டமின் பி12 ஊட்டசத்து மிகவும் இன்றியமையாதது. அவற்றின் குறைபாடு காரணமாக, நரம்புகள் பலவீனமடைந்து நரம்பு தளர்ச்சி ஏற்படும். இந்த வைட்டமின் சத்தினை பெற, முட்டை, இறைச்சி, காளான் மற்றும் கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

3 /7

நரம்புகளுக்கு அவசியமான மற்றொரு வைட்டமின் சத்தான B9,ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. கருவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது அவசியம். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் இதை அவசியம் உட்கொள்ள வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள், சோயாபீன்ஸ், கருப்பு பீன்ஸ் மற்றும் கிவி சாப்பிடுவதன் மூலம் நீங்கள் வைட்டமின் B9 ஊட்டசத்தினை பெறலாம்.

4 /7

வைட்டமின் ஈ ஊட்டசத்து நரம்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மற்றோரு ஊட்டசத்து ஆக்கும். இதன் குறைபாடு நரம்புகளை பலவீனப்படுத்தும். காய்கறி எண்ணெய், பாதாம், அக்ரூட் பருப்புகள், கிவி சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஈ ஊட்டசத்தினை பெறலாம்.

5 /7

வைட்டமின் B6 உடலின் அனைத்து நரம்புகளையும் வலுப்படுத்த பயன்படுகிறது. முழு தானிய தானியங்கள், மீன் மற்றும் பருப்பு வகைகள் வாழைப்பழம், நிலக்கடலை, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை வைட்டமின் பி6 இன் சிறந்த ஆதாரங்கள். 

6 /7

நரம்பியல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி1 சத்து உடலில் அசிடைல்கோலின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்ய துணைப்புரிகின்றது. இது ஒரு நரம்பியல் கடத்தியாக செயல்படுகிறது. வைட்டமின் பி1 குறைபாட்டைப் போக்க, ஓட்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.