பான் - ஆதார் இணைக்காத 2.12 கோடி பேர்... ரூ. 2,125 கோடி அபராதம் வசூல்...!

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் பல முக்கியமான வேலைகள் தடைபடும். பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை வங்கி பரிமாற்றம் மூலம் செய்ய முடியாது. 

ஆதாருடன் பான் இணைக்கப்படவில்லை என்றால், பான் மட்டும் செயலிழந்துவிடும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் அரசு திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது.

1 /6

பான் மற்றும் ஆதாரை (பான்-ஆதார்) இணைக்க மத்திய அரசு 2023 ஜூன் 30ம் தேதியை காலக்கெடுவாக விதித்திருந்தது. இதற்குப் பிறகு, ரூ. 1000 அபராதம் செலுத்தி பான் மற்றும் ஆதாரை இணைக்கலாம் என கூறப்பட்டது.

2 /6

பான் கார்டு ஆதார் கார்டு இணைத்திருப்பவர்களில், 2.12 கோடி பேர் அபராதத்துடன் ஆவணத்தை இணைத்துள்ளனர்.  

3 /6

நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ஜூலை 1, 2023 முதல் அபராதத்துடன் பான் மற்றும் ஆதாரை இணைத்ததன் மூலம் அரசாங்கம் சுமார் 2,125 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த காலகட்டத்தில், சுமார் 2.12 கோடி பேர் பான் எண்ணை ஆதாருடன் இணைத்துள்ளனர்.

4 /6

பான் - ஆதார் இணைக்கப்படாவிட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தகவல் அளித்த மத்திய நிதியமைச்சர், பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால், வரித்துறையிடம் இருந்து வரி பணத்தை திரும்ப பெற இயலாது வழங்கப்படாது. மேலும், பான் எண் செயல்படாமல் இருந்தால் வட்டியும் வழங்கப்படாது.

5 /6

நீங்கள் வரி செலுத்தி, உங்கள் பான் எண்ணை ஆதாருடன் (பான்-ஆதார் இணைப்பு) இணைக்கவில்லை என்றால், அரசாங்கம் அதிக வரி வசூலிக்க கூடும். 

6 /6

நாட்டில் சுமார் 70 கோடி பான் கார்டு வைத்திருப்பவர்கள் இருப்பதாகவும், அவர்களில் இதுவரை 60 கோடி பான் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாகவும் நிதித்துறை இணை அமைச்சர் கூறினார். பான் கார்டு ஆதார் கார்டு இணைத்திருப்பவர்களில், 2.12 கோடி பேர் அபராதத்துடன் ஆவணத்தை இணைத்துள்ளனர்.