கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை களை கட்ட வைத்த ஏர் இண்டியா Christmas Comes Early ஆஃபர்

Christmas Comes Early: ஆண்டு முடியும் நேரத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பல்வேறு வழித்தடங்களில் விமானப் பயணத்திற்கான டிக்கெட்டுகளில் ஏர் இந்தியா பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதனுடன், கூடுதல் வசதிகளும் செய்து தரப்படுகின்றன

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், விமானப் பயணத்திற்கான கட்டணங்களில் தள்ளுபடி, பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏர் இந்தியா, கிறிஸ்துமஸ் கொண்டாட பயணிப்பவர்களுக்காக, Christmas Comes Early என்ற தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகளுக்கு பெரும் தள்ளுபடிகளை வழங்கும் இந்த ஆஃபரில், விமான டிக்கெட்டுகளில் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் மற்றும் கணிசமான தொகையை சேமிக்க முடியும்.

1 /8

ஏர் இந்தியா வழங்கியிருக்கும் இந்த சலுகை கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமா? இந்த சமயத்தில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் தள்ளுபடி விலையில் விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்.  

2 /8

கிறிஸ்துமஸ் விமான டிக்கெட் சலுகையை ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மூன்றாம் தரப்பு போர்ட்டலில் இருந்தும் பெறலாம்.  

3 /8

2023 டிசம்பர் 2 முதல் 2024 மே 30 வரையிலான பயணங்களுக்கு நவம்பரில் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 /8

பெங்களூரு-கண்ணூர், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-திருவனந்தபுரம், பெங்களூரு-மங்களூர், கண்ணூர்-திருவனந்தபுரம், சென்னை-திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு-திருச்சிராப்பள்ளி ஆகிய விமான சேவைகளுக்கு இந்த தள்ளுபடி விற்பனையில் சலுகை விலை டிக்கெட்கள் கிடைக்கும்

5 /8

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கிறிஸ்துமஸ் விற்பனை - உள்நுழைந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்க, ஏர் இந்தியா சில கூடுதல் வசதிகள் மற்றும் சேவைகளை கட்டணமில்லாமல் வழங்குகிறது  

6 /8

ஏர் இண்டியா விமான நிறுவனம் தனது வலையமைப்பை வேகமாக விரிவுபடுத்தி புதிய வழித்தடங்களில் லாபகரமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

7 /8

சமீபத்தில், விமான நிறுவனம் ஹைதராபாத்தை லக்னோ, கொச்சி மற்றும் அமிர்தசரஸுடன் இணைக்கும் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

8 /8

பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவை, ஏர் இண்டியா வலைதளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதபப்ட்டவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.