கருவளையங்களை விரட்ட சில எளிய டிப்ஸ்; விலையுயர்ந்த மருந்துகள் எதுவும் தேவையில்லை

முகத்தின் அழகைக் கெடுப்பதோடு, வயதான தோற்றத்தையும் கொடுக்கும் கருவளையங்களை விரட்ட சில எளிய வீட்டு வைத்தியங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.

 

1 /5

இரசாயன அடிப்படையிலான கருவளையங்களை குணப்படுத்த முடியும் என்றாலும், முகத்தின் சருமங்கள் மிகவும் சென்ஸிடிவ் ஆனது என்பதால் வீட்டு வைத்தியம் மிகவும் சிறந்தது.

2 /5

பச்சை உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுக்கவும். சாற்றை ஒரு பருத்தி துணியில் நனைத்து, கண்களை மூடிக்கொண்டு கருமையான வட்டத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

3 /5

கருவளையங்களில் இருந்து விடுதலை பெற தக்காளி ஒரு சஞ்சீவி போல் செயல்படுவதோடு, சருமத்தை மென்மையாக்குகிறது. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அருகில் கருவளையங்கள் இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பின் தண்ணீரில் கழுவவும். 

4 /5

தேநீர் பையை தண்ணீரில் நனைத்து, சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அதன் பிறகு கண்களை மூடி அந்த டீ பேக்கை கருவளையத்தில் வைக்கவும். இதை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தெரியும்.

5 /5

ஆரஞ்சு சாறு மற்றும் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்துவதன் மூலம், கருவளையங்கள் படிப்படியாக குறையும். இது சருமத்திற்கு பொலிவையும் தருகிறது.