நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் கறிவிப்பிலை வைத்தியம்...!!

சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ், கறிவேப்பிலை பொடி போன்ற வடிவங்களிலும் எடுத்துக் கொள்ளலாம். 

1 /9

சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க தாளிக்கும் போது சேர்க்கப்படும் கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ், கறிவேப்பிலை பொடி போன்ற வடிவங்களிலும் எடுத்துக் கொள்ளலாம். 

2 /9

உடல் பருமன் குறைய தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.  

3 /9

மலச்சிக்கல் தீர  ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். அதே போன்று, வயிற்றுப்போக்கு நிற்க, 15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.  

4 /9

கறிவேப்பிலை சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

5 /9

இரத்த சோகை நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.

6 /9

கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்புக்கள் கரைவதோடு நீரிழிவும் தடுக்கப்படும். இதனால் இதயம் வலுவடையும்

7 /9

செரிமான கோளாறு நீங்க, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக குணமாகும்.

8 /9

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.