குரு பெயர்ச்சி 2022: இந்த 3 ராசிகளுக்கு எச்சரிக்கை, கவனம் தேவை

குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த 4 மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் இன்று முதல் ஏப்ரல் இறுதி வரை மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். இதனால் 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

1 /5

குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதம் மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று அதிகாலை 4.36 மணிக்கு குரு வக்ர நிவர்த்தி அடைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் பல வித தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 /5

இந்த ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அசுபமானது: குருவின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் சாதகமாக இருக்காது. பல ராசிக்காரர்களுக்கு இது மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களின் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

3 /5

சிம்ம ராசி: வாழ்க்கையில் எழுச்சி ஏற்படும். நீதிமன்ற வழக்கில் சிக்கிக் கொள்ளலாம், தேவையில்லாமல் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

4 /5

துலாம் ராசி: சமூகத்தில் மரியாதை கிடைக்கும், சமயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள்.

5 /5

தனுசு ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு வேதனை தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். விபத்துக்கான வாய்ப்புகள் உருவாகலாம், எனவே வாகனம் ஓட்டும்போது சிறப்பு கவனம் தேவை.