புற்று நோய் முதல் கொல்ஸ்ட்ரால் வரை... வியக்க வைக்கும் மாதுளை!

Health Benefits of Pomegranates: மாதுளை பழம் நாம் எடுத்துகொள்ளும் சிறந்த உணவுகளில் ஒன்று. நார்ச்சத்து வைட்டமின்கள் தாதுக்கள் நிறைந்த மாதுளையில் கலோரியும் கொழுப்பும் குறைவாக உள்ளது. இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறையும். 

மாதுளை பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், பிராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கிறது. மேலும், இதில் வைட்டமின் சி, நார்சத்து, பொட்டாஷியம் ஆகியவையும் உள்ளது.

1 /7

மாதுளையில் உள்ள பாலிஃபினால் கலவைகள், இதய தமனி சுவர்கள் தடிமன் ஆவதை தடுக்கிறது. அதோடு கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை வலுப்படுக்கிறது. கெட்ட கொல்ஸ்ட்ரால் அதிகமானால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதனால் மாதுளையை தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

2 /7

ரெட் ஒயினை விட அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட மாதுளை, நுரையீரல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

3 /7

எலும்புகளை வலுப்படுத்தும் திறன் கொண்ட மாதுளை வீக்கத்தை குறைக்கும் மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி கீ்ல்வாதம் போன்ற பிரச்சனைகளிலிருந்து உடலை காக்கிறது.

4 /7

மலச்சிக்கல் கவனிக்கப்படாமல் இருந்தால், பைல்ஸ் போன்ற பலவேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நார்ச்சத்து நிறைந்த மாதுளை மலச்சிக்கலை போக்கி, பைல்ஸ் நோயையும் குணப்படுத்துகிறது.

5 /7

குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமானத்தை வலுப்படுத்தும் திறன் மாதுளையில் உள்ளது.

6 /7

பழங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு மாதுளம் பழம் மிக நல்லது. மாதுளம் சாறுக்கு பதிலாக, மாதுளை விதையுடன் சேர்த்து நின்று சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்தத்தின் சர்க்கரை அளவு மிகவும் கட்டுப்படும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.