என்.டி.ரா-ன் வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்.ஜி.ஆர்...!

இன்று ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Last Updated : Mar 29, 2018, 02:55 PM IST
என்.டி.ரா-ன் வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்.ஜி.ஆர்...!  title=

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்த மறைந்த என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகா உருவாக்கும் நிலையில். இந்த படத்தில் என்.டி.பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு போட்டியாக மற்றொரு முன்னாள் முதல்வர் கதையும் படமாகிறது என தகவல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. 

ஆந்திர முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கையை வாழ்க்கை சரித்திர படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்மூட்டியும், ஒய்.எஸ்.ஆர்-ன் மனைவி விஜயம்மாவாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் மகிராகவ் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு யாத்ரா என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! 

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் தயாராகிறது. இந்த திரை படத்தை இயக்குனர் தேஜா இயக்குகிறார். 

இந்த படத்தில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணாவே அரசியல்வாதி என்.டி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க இந்தி நடிகை வித்யாபாலனை கேட்டுள்ளனர். ஆனால் வித்யாபாலன் அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை என தெரிவித்திருந்தனர். 

பின்னர் மீண்டும் அவரை டைரக்டர் தேஜா சந்தித்து முழுக் கதையையும் சொன்ன பிறகு தான் கதை பிடித்திருப்பதாக கூறியிருக்கிறாராம். அவர் நடிப்பது என்.டி.ஆரின் மனைவி வேடம் என்ற போதும், அவரை எதிர்த்து செயல் படக்கூடிய வேடம் என்றும் கூறியிருந்தனர். 

இதையடுத்து, இன்று ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. என்.டி.ஆர்-ன் படத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டது குறிப்பிடதக்கது. 

Trending News