நேபாளத்திற்கு கைப்பந்து விளையாட சென்ற தமிழக வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

நேபாள நாட்டிற்கு கைப்பந்து விளையாட சென்ற வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. இறந்த உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2022, 12:09 AM IST
நேபாளத்திற்கு கைப்பந்து விளையாட சென்ற தமிழக வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு! title=

நேபாள நாட்டிற்கு கைப்பந்து விளையாட சென்ற வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. இறந்த உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் ஊராட்சியை சேர்ந்த நேருதாசன் என்பவரது மகன் ஆகாஷ் (27), இவர் அம்பத்தூரில் தனியார் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 21ம் தேதி கைப்பந்து விளையாட நேபால் நாட்டிற்கு சென்று விளையாடி உள்ளார். முதல் போட்டியில் விளையாடிய பின்னர் ஓய்வு அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது அப்போது அவர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

தமிழக அரசின் முயற்சியால் இன்று ஆகாஷின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், இறந்தவரின் உறவினர்கள் வந்திருந்தனர்.

மேலும் படிக்க | நிலங்கள் பிடுங்கப்படுவது தமிழர்களிடம்; வேலை மட்டும் வேறு மாநிலத்தவருக்கா?... கொந்தளிக்கும் சீமான்

ஆகாஷ் உடல் மீது வாலிபால், அவர் ஏற்கனவே போட்டிகளில் வெற்றி பெற்று வாங்கிய கோப்பைகளை வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். நேபாளத்தில் ஆகாஷ் உயிரிழந்த தகவல் கிடைத்த உடன் முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து உடலை குடும்பத்துடன் ஒப்படைக்கும் நடவடிக்கையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டார்.

மேலும் படிக்க | பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News