2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையை வளமான நாடாக மாற்றுவோம்: இலங்கை அதிபர்

Sri Lanka: அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் நிலைமையை சீராக்குவோம்: இலங்கை அதிபர்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2023, 02:57 PM IST
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
  • பலர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் அகதிகளாக வந்துள்ளனர்.
  • இலங்கை அதிபர் 2023 ஆம் ஆண்டு இலங்கையின் நிலையை சீராக்குவோன் என கூறியுள்ளது மக்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையை வளமான நாடாக மாற்றுவோம்: இலங்கை அதிபர் title=

அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையை வளமையான நாடாக மாற்றுவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கை அதிபர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தி, முழு அரசாங்கமும் ஒரே பொறிமுறையாகச் செயல்பட வேண்டும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | NRI Awards: அந்நிய மண்ணில் சாதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு விருது 

பணி நேரம் 8 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பணிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை எனவும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனைவரின் ஆதரவுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை வழமைக்கு கொண்டு வர எதிர்ப்பார்த்துள்ளதுடன் இந்நாட்டை முன்னேக்கி கொண்டு செல்லவும் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்ட நாட்களாக பொருளாதார சிக்கல் இருந்து வருகிறது. பல வித காரணங்களால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாகி வருகின்றது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு விண்ணை எட்டியுள்ளது.

sri lanka crisis

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பலர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் 2023 ஆம் ஆண்டு இலங்கையின் நிலையை சீராக்குவோன் என கூறியுள்ளது மக்களுக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. 

மேலும் படிக்க | NRI Day: எல்லைகள் தாண்டி மொழியால் தமிழர்களை ஒன்றிணைக்கும் அயலகத் தமிழர் நாள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News