அமீரகத்தில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 6, 2022, 01:42 PM IST
  • அமீரகத்திற்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் சென்றார்
  • அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
  • அய்மான் சங்கம் சார்பாக இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது
அமீரகத்தில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு title=

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வரும் பொருளாதாரத் துறையின் துறைத் தலைவருமான முனைவர் பேராசிரியர் அல்ஹாஜ் பி.என்.பி. முஹம்மது சகாபுதீன் சென்றார். அவருக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச்.எம் முஹம்மது ஜமாலுதீன் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியை ஆடுதுறை இமாம் இ.ஷாஹுல் ஹமீது தாவூதி இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 42 வருடங்களாக அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை சங்கத்தின் பொருளாளர் ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் பி.என். பி. முஹம்மது சகாபுதீனுடன் கலந்துரையாடலுக்கு பிறகு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஏ. அப்துல் ஹமீது, எடிசலாட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நவுசாத் அலி ஷேக் சேக்பூத் மருத்துவ நகரத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மேலாளர் நாகூர் அமீர் அலி அய்மான் சங்கத்தின் நுணைத் தலைவர் மதுக்கூர் ஒய் எம் அப்துல்லா. 

பைத்துல்மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், துணைப் பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா. சங்கத்தின் உறுப்பினர்கள் எம். முஹம்மது யாசிர், எம். முஹம்மது அஸ்பர், லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டார்கள் இறுதியாக அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி நன்றியுரை வழங்க லால்பேட்டை மௌலவி ரஷீத் அஹ்மது ஜமாலி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் படிக்க | அமீரகத்தின் 51ஆவது தேசிய தினம் - ரத்த தானம் வழங்கிய தேமுதிக

மேலும் படிக்க | இலங்கை தமிழர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே வைத்திருக்கும் கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News