காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சி - இந்தியா கொடுத்த கடன்

இலங்கை நாட்டின் காங்கேசன்துறை துறைமுகம் வளர்ச்சிக்கு இந்தியா கடன் கொடுத்ததாக அந்நாட்டின் அமைச்சர் நிமல் சில்வா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 3, 2022, 11:53 PM IST
  • காங்கேசன் துறை துறைமுகம் வளர்ச்சி
  • நிதியுதவி செய்தது இந்தியா
  • இலங்கை அமைச்ச சில்வா விளக்கம்
 காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சி - இந்தியா கொடுத்த கடன் title=

இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கேசன்துறை துறைமுக வளர்ச்சிக்கு 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு வளர்ச்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக வளர்ச்சி செய்யப்படும். இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன்  வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருக்கிறது.

முன்னதாக, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. 

இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும். இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | அஜ்மானில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் சந்திப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News