NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ

Aadhaar for NRI: பல என்ஆர்ஐ- கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2023, 01:11 PM IST
  • ஆதார் அட்டை என்பது அனைவருக்குமான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
  • ஆதார் அட்டை முகவரிக்கான சான்றாக மட்டும் செயல்படாமல், மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் நன்மைகளைப் பெறவும் அவசியமாகிறது.
  • இந்திய குடிமக்களுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
NRI ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது? முழு செயல்முறை இதோ title=

என்ஆர்ஐ-க்கான ஆதார் அட்டை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆதார் அட்டை என்பது அனைவருக்குமான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அபராதத் தொகையைத் தவிர்ப்பதற்காக வங்கிக் கணக்குகள் மற்றும் பிற சேவைகளுடன் இணைக்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை முகவரிக்கான சான்றாக மட்டும் செயல்படாமல், மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் நன்மைகளைப் பெறவும் அவசியமாகிறது. 

இந்திய குடிமக்களுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பல என்ஆர்ஐ- கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டுகளை கொண்டிருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்ஆர்ஐ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | US IDFC நிர்வாக அதிகாரியாக இந்திய - அமெரிக்கரை நியமித்துள்ளார் ஜோ பைடன்!

என்ஆர்ஐ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

- உங்கள் பகுதியில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு செல்லவும்.

- உங்களின் தற்போதைய இந்திய பாஸ்போர்ட்டை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

- தேவையான அனைத்து தகவல்களுடன் பதிவு படிவத்தை நிரப்பவும். 

- பதிவு படிவத்தில் நீங்கள் வழங்கிய தகவல் பாஸ்போர்ட்டில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

- படிவத்தில், விண்ணப்பதாரர் தனது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.

- இப்போது ஆபரேட்டர் உங்களை என்ஆர்ஐ என்று பட்டியலிடுமாறு கோருங்கள்.

- என்ஆர்ஐ விண்ணப்பதாரர் ஆதார் அட்டை விண்ணப்பத்துடன் கூடுதலாக ஒரு டிக்லரேஷனை சமர்ப்பிக்க வேண்டும். 

- என்ஆர்ஐ- களுக்கு டிக்லரெஷன் சற்று வித்தியாசமானது, எனவே அதை கவனமாக படித்து முடிக்கவும்.

- ஒரு என்ஆர்ஐ ஆக உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நிரப்ப ஆபரேட்டருக்கு உதவுங்கள்.

- உதவியாளர் உங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் அடையாளமாக உள்ளிடுவார்.

- பயோமெட்ரிக் பிடிப்பு செயல்முறையை முடிக்க, உங்கள் கண்களை ஸ்கேன் செய்துகொள்ளுங்கள்.

- முழுமையான விண்ணப்பத் தகவலை கவனமாக மதிப்பாய்வு செய்வது செயல்முறையின் மிக முக்கியமான படியாகும்.

- விண்ணப்ப செயல்முறை முடிந்ததும் நீங்கள் ஒப்புகை ரசீதைப் பெறுவீர்கள்.

- இதை கவனமாக வைத்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க | அமீரகம் வாழ் இந்தியர்களுக்கு அதிர்ச்சி: விமான கட்டணங்கள் உயர்கின்றன!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News