உச்சகட்ட டென்ஷனில் சௌந்தரபாண்டி.. ரத்னா எடுக்கும் முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்

Zee Tamil Anna Serial July 19th 2023 Update: உச்சகட்ட டென்ஷனில் சௌந்தரபாண்டி.. ரத்னா எடுக்கும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2023, 12:05 PM IST
  • முத்துப்பாண்டியின் பத்திரிக்கை விநியோகம்
  • ரத்னாவின் அதிரடி முடிவு
  • அண்ணா கிட்ட யாரும் இது பற்றி பேச கூடாது கண்டிக்கும் ரத்னா
உச்சகட்ட டென்ஷனில் சௌந்தரபாண்டி.. ரத்னா எடுக்கும் முடிவு! அண்ணா சீரியல் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டியிடம் இந்த கல்யாணம் வேண்டாம் என்று எதிர்த்து பேசி விட்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

முந்தைய எபிசோடில், என் வீட்டுல அப்பா அண்ணன் என இரண்டு பேருமே ஆணாதிக்கம் பிடிச்சவங்க தான், ரத்னா இங்க வந்து கஷ்டப்படக்கூடாது தான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன் என்று பரணி சொல்கிறாள். ஆனால் நீ எங்க அப்பா பொண்ணு கேட்டதும் அவ்வளவு சந்தோஷப்பட்ட, இதுக்கு தானா என கேள்வி கேட்கிறாள்.

மேலும் உன் தங்கச்சி என் வீட்டுக்கு வந்தா ஒரு வேலைக்காரியா தான் இருக்கணும். ஏற்கனவே உங்க வீட்ல இருந்து எங்க அம்மா வந்து ஒரு வேலைக்காரி மாதிரி தான் இருக்காங்க என சொல்கிறாள். 

அதாவது, முத்துப்பாண்டி எல்லாருக்கும் பத்திரிகையை நானே கொடுக்க போகிறேன், இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல வீட்டில் சௌந்தரபாண்டி ஷண்முகம் எதிர்த்து பேசிய டென்ஷனில் கிணத்தடியில் உட்கார்ந்து கொண்டு வேலையாட்களை தண்ணீரை எடுத்து தலை மேல ஊற்றி கொண்டே இருக்க சொல்கிறார். 

பரணியும் பாக்கியமும் அங்கு வந்து ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க? உடம்புக்கு ஏதாவது ஆக போகுது, நாங்க ஷண்முகமிடம் பேசுறோம் என்று சொல்கின்றனர், இதை கேட்ட சௌந்தரபாண்டி நீங்க ஏன் பேசணும்? உங்களுக்கு மனசு குளுகுளுனு இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் என சத்தம் போடுகிறார்.

மறுபக்கம் கனி உடம்பு முடியாமல் படுத்திருக்க அவளுக்கு பத்து போட்டு விட்டுள்ளனர், திடீரென ரத்னாவை முத்துப்பாண்டி அடிப்பது போல கனவு கண்டு அலறி எழுந்து கொள்கிறாள். இந்த கல்யாணம் வேண்டாம் அக்கா, நீ முத்துபாண்டியை கட்டிக்காத.. அண்ணா கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடு என்று சொல்கிறாள். மற்ற தங்கைகளும் அதையே சொல்கின்றனர். 

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

ஆனால் ரத்னா நம்ம வீட்ல பொண்ணு எடுக்க எல்லாரும் யோசிக்கிறாங்க,எனக்கு இப்படி நல்ல இடத்துல வாழ்க்கை அமைந்தா உங்க எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை அமையும், அதனால் இந்த கல்யாணம் நடக்கட்டும்.. அண்ணா கிட்ட யாரும் இது பற்றி பேச கூடாது என்று சொல்கிறாள். அடுத்ததாகசௌந்தரபாண்டி ஜலதோஷம் பிடித்து சாம்பிராணி போட்டு கொண்டிருக்க அங்கு வரும் பரணி இதெல்லாம் உங்களுக்கு தேவையா என மாத்திரையை கொடுக்க ஓ டாக்டருக்கு படித்ததால் மாத்திரை தரியா? அப்பா என்ற பாசம் எல்லாம் இருக்கா என்று கேள்வி கேட்கிறார்.

பரணி அப்பான்னு கொடுக்கல, நான் டாக்டர், நீங்க பேஷண்ட் அவ்வளவு தான் என்று பதிலடி கொடுக்கிறாள், அடுத்ததாக ஷண்முகம் பிரியாணி வாங்கி எடுத்து கொண்டு பாட்டு பாடி கொண்டே வீட்டுக்குள் நுழைகிறாள். கல்யாணத்தை நிறுத்திய விஷயம் தெரிய வந்தால் என்னவாகும் என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியின் முடிவு.. காணாமல் போகும் ரத்னா, சண்முகத்துக்கு ஷாக் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News