ரத்னாவை பெண் கேட்ட சௌந்தர பாண்டி.. சூழ்ச்சியில் சிக்கிய ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் மீண்டும் சண்முகம் வீட்டு வாசலில் வந்து நின்ற நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2023, 12:29 PM IST
  • முத்துப்பாண்டி பாக்கியத்திடம் சண்முகம் பற்றி விசாரித்தான்.
  • வெங்கடேஷை பார்த்த சண்முகம் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறான்.
  • இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன.
ரத்னாவை பெண் கேட்ட சௌந்தர பாண்டி.. சூழ்ச்சியில் சிக்கிய ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் மீண்டும் சண்முகம் வீட்டு வாசலில் வந்து நின்ற நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது வெங்கடேஷை பார்த்த சண்முகம் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவன் எனக்கு உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க முழு விருப்பம் என்னுடைய பெற்றோர்கள் சம்மதமே இல்லாமல் உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்ல நேத்து அவங்க அவ்வளவு பேசும்போது வாயை மூடிக்கொண்டு தானே இருந்த? உன் அப்பா அம்மாவோட வந்து பேசு என ஷண்முகம் திட்டுகிறான். மேலும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறான்.

ஆனால் வெங்கடேஷ் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி நீங்க சொல்லாதீங்க ரத்னா சொல்லட்டும் என சொல்ல ரத்னா எங்க அண்ணா எதுவா இருந்தாலும் எங்க நல்லதுக்கு தான் யோசிச்சு முடிவு எடுக்கும், நீ வெளியே போ என்று சொல்ல அவன் வேறு வழி இல்லாமல் வெளியே சென்று விடுகிறான். 

அதன் பிறகு இங்கே முத்துப்பாண்டி பாக்கியத்திடம் சண்முகம் பற்றி விசாரிக்க அவள் நிச்சயம் நின்று போன சோகத்தில் இருப்பதாக சொல்ல முத்துப்பாண்டி ரத்னாவை நான் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கேன் என்று சொல்ல பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். 

இதை கேட்டு சௌந்தர பாண்டியும் அதிர்ச்சி அடைந்து முக்கூடர்ல உனக்கு பெரிய பணக்கார வீட்டு பொண்ணு குடுக்கிறதா சொல்லி இருக்காங்க நீ என்னடா ரத்னாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற என கோபப்பட அவன் பணக்கார வீட்டு பொண்ணு கட்டிட்டு வந்து வெச்சா அவ நம்மளுக்கு ஏத்த மாதிரி இருக்க மாட்டா என சொல்கிறான். 

 மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

ஏழை வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா தான் நமக்கு அடிமை மாதிரி நம்ம சொல்றத எல்லாத்தையும் செய்வாள். நான் மட்டும் ரத்னாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த சண்முகம் என்னைக்கும் உங்க காலடியிலேயே விழுந்து கிடப்பான் என சொல்ல சௌந்தரபாண்டி சம்மதம் தெரிவித்து தனது ஆள் ஒருவனை அனுப்பி சண்முகத்தை கையோடு கூட்டி வரச் சொல்கிறான். 

இதைக் கேட்ட பாக்கியம் பரணியிடம் உங்க அப்பா ரத்னாவை முத்துப்பாண்டிக்கு கல்யாணம் கட்டி வைக்க முடிவு பண்ணி இருக்காரு இது நடக்கக்கூடாது நீ உடனடியா சண்முகத்தை சந்தித்து அப்பா கூப்பிட்டா வராதே என்று சொல்லு என்று அனுப்பி வைக்க அவள் சண்முகத்தை தேடி அலைகிறாள். ஒரு கட்டத்தில் சண்முகத்தை சந்தித்து விஷயத்தை சொல்ல போக அந்த சமயம் பார்த்து சௌந்தர பாண்டி அனுப்பிய ஆள் அங்கு வந்து உன்னை மாமா உடனடியா கூட்டிட்டு வர சொன்னாரு என்று சொல்லி கூட்டி செல்கிறான். 

சண்முகம் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி நீ அவமானப்பட்டு நிற்பதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டே இருந்தேன் அப்பதான் முத்துப்பாண்டி ரத்னாவை கட்டிக்கிறேன்னு சொன்னான். ரத்னாவை முத்துப்பாண்டிக்கு நான் பொண்ணு எடுத்துக்கிறேன் என்று சொல்ல சண்முகம் சந்தோஷப்பட்டு சௌந்தரபாண்டி காலில் விழுந்து நீங்க என் குலசாமி என கலங்குகிறான். 

பிறகு பாக்கியத்தை வெத்தலை பாக்கை எடுத்து வர சொல்லி அதை சண்முகத்திடம் கொடுக்க அவன் கண்ணீருடன் சந்தோஷப்பட்டு வாங்கிக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News