அண்ணா சீரியல் அப்டேட்: மாப்பிள்ளையாக மாறும் ஷண்முகம்! கல்யாணம் இப்போ தேவையா? கேள்வி

Zee Tamil Anna Serial: கல்யாண ஆசையில் ஷண்முகம்.. பரணி சொல்ல போகும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2023, 10:52 AM IST
  • நம்ம வீட்டுக்கு ஐந்தாவதாக ஒரு பொண்ணு வரப் போகுது
  • பரணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? இல்லையா?
  • திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்ன பரணி
அண்ணா சீரியல் அப்டேட்: மாப்பிள்ளையாக மாறும் ஷண்முகம்! கல்யாணம் இப்போ தேவையா? கேள்வி title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இன்றைய காலகட்டத்தில், சினிமாவை விட, தொலைக்காட்சி சீரியல்களை அனைவரும் விரும்பி பார்க்கின்றனர். வீட்டில் வேலை பார்த்துக் கொண்டே சீரியலை பார்க்கலாம் என்பதால், பெண்களிடையே பிரபலமாகி விட்ட சீரியல்கள், தற்போது, அனைவருக்கும் போதை கொடுக்கும் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிவபாலன் வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி வர சொன்ன விசயத்தை சொன்ன நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, ஷண்முகம் தங்கைகள் நம்ம வீட்டுக்கு ஐந்தாவதாக ஒரு பொண்ணு வர போவதாக சொல்ல ஷண்முகம் சந்தோஷப்படுகிறான். பிறகு ஷண்முகம் கடைக்கு வந்ததும் அவனுக்குள் பரணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? இல்லையா என்ற சந்தேகம் வருகிறது. பிறகு பரணிக்கு போன் செய்து கல்யாண விசியம் பற்றி பேசுகிறார்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

பாத்திர கடைக்கார மாப்பிள்ளை பற்றி கேட்பதாக நினைத்த பரணி, எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்ல, ஷண்முகத்திற்கு கவலை ஏற்படுகிறது. கவலை வேண்டாம், எல்லாம் போக போகச் சரியாகிவிடும் என ஆணாவூனாவும் வெட்டுக்கிளியும் ஷண்முகத்தை சமாதானம் செய்கின்றனர். 

இதனை தொடர்ந்து ஷண்முகம் வெள்ளை வேட்டி சட்டையில் தயாராகி வெளியே வர 4 தங்கைகளும் அவனுக்கு தலை சீவி பவுடர் அடித்து விட்டு மாப்பிளை போல மாற்றுகின்றனர். பிறகு ஷண்முகம் முருகனின் போட்டோ முன்பு நின்று எனக்கு இந்த கல்யாணம் இப்போ தேவையா என்று கேட்க நான்கு தங்கைகளும் அவனுக்கு எடுத்து சொல்லி சமாதானம் செய்கின்றனர். 

பிறகு ஷண்முகம் தனது தங்கைகளுடன் சௌந்தரபாண்டி வீட்டுக்கு வர அவர் வாங்க மாப்பிளை என வரவேற்று எதுல வந்தீங்க என்று கேட்க நடந்து தான் வந்ததாக ஷண்முகம் சொல்ல சௌந்தரபாண்டி சொல்லி இருந்தால் வண்டி அனுப்பி இருப்பேன்ல என பேசுகிறார். 

அதன் பிறகு ஷண்முகம் பதற்றமாகவே இருக்க முத்து பாண்டி அவனை கூல் செய்து அப்படியே ரத்னாவை பார்க்க ரத்னா அவனை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். பின்னர் ஷண்முகம் புடவையில் இருக்கும் பரணியின் அழகில் மயங்கி அவளிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என்று கேட்கிறார்.

அப்பா நம்மளை டெஸ்ட் பன்றாரு என்று நினைத்த பரணி எனக்கு விருப்பம் தான் என்று சொல்ல, ஷண்முகம் சந்தோஷம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க |  தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News