தங்கைகளுக்கு சண்முகம் சொன்ன குட் நியூஸ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Anna Serial July 20th 2023 Update: தங்கைகளுக்கு சண்முகம் சொன்ன குட் நியூஸ்.. முத்துப்பாண்டியால் கடுப்பான சௌந்தர பாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 20, 2023, 11:53 AM IST
  • முத்துப்பாண்டி இரவில் ஜீப்பில் போலீசார் உடன் உட்கார்ந்து கொண்டு பயணம்.
  • அண்ணா பறவை நான்கு தங்கச்சி பறவைங்க மேல பாசத்தை கொட்டி வளர்த்தது.
  • தங்கைகள் எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே சமயம் சந்தோஷமும் அடைகின்றனர்.
தங்கைகளுக்கு சண்முகம் சொன்ன குட் நியூஸ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இந்த கல்யாணம் நடக்காது என சொல்லிவிட்டு வர முத்துப்பாண்டி எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போவதாக முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது பிரியாணி பொட்டலத்துடன் சண்முகம் புத்தியுள்ள மனிதர்கள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை என பாட்டு பாடிக்கொண்டே வீட்டுக்குள் வருகிறான். தன்னுடைய தங்கச்சியிடம் சைகையில் அக்கா அழுகிறாளா? என கேட்க அவள் இல்லை என சொல்கிறாள். பிறகு பிரியாணி வாங்கி வந்திருக்கேன் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட இசக்கி எங்க போயிட்டு வந்த அண்ணே என்று கேட்க திருச்செந்தூர் முருகனைப் பார்க்க போயிருந்ததாக சொல்கிறான். 

அதன் பிறகு ரத்னா அங்கு வந்து கனிக்கு உடம்பு சரி இல்லை என சொல்ல சண்முகம் ஓடிச்சென்று அவளை தூக்கி வந்து உட்கார வைத்து இதுதான் மருந்து சாப்பிடு என எல்லோருக்கும் பிரியாணியை ஊட்டி விடுகிறான். மேலும் அப்பா வைகுண்டம் கல்யாண பத்திரிக்கை வாங்கப் போனியே எங்க பத்திரிக்கை எனக் கேட்க அது பறந்து போக வேண்டிய இடத்துக்கு போயிடுச்சு என சொல்கிறான். 

மறுபக்கம் முத்துப்பாண்டி இரவில் ஜீப்பில் போலீசார் உடன் உட்கார்ந்து கொண்டு அந்த வழியாக வரும் எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும் என அழைக்கிறான். மேலும் சனியனை அழைத்து நாளைக்கு சண்முகம் வீட்டுக்கு போய் உன் தங்கச்சி உடைய கல்யாண பத்திரிக்கை வந்துடுச்சு கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துடுவேன் என சொல்லிட்டு எனக்கு தகவல் கொடுக்கணும் என சொல்ல அவனும் அப்படியே செய்கிறேன் ஐயா  என்கிறான். 

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு சண்முகம் வாங்க எல்லாரும் ஒண்ணா உக்காந்து பேசலாம் அப்படி பேசி ரொம்ப நாளாச்சு என சொல்லி எல்லாரையும் கூப்பிட அப்பா நானும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்று கேட்க வாங்க என சொல்கிறான். என்ன பேசுறது என்று கேட்க தூக்கம் வரல நான் ஒரு கதை சொல்றேன் என சண்முகம் தன்னுடைய கதையை பறவைகள் கதையாக சித்தரித்து சொல்கிறான். 

ஒரு குடும்பத்துல ஆறு பறவை இருந்துச்சு அம்மா பறவை விட்டு போயிடுச்சு அண்ணா பறவை நான்கு தங்கச்சி பறவைங்க மேல பாசத்தை கொட்டி வளர்த்து தங்கச்சி பறவை கிட்ட கேட்காமலயே சிங்ககுகையில் இருக்கும் ஒரு குட்டி சிங்கத்துக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடிவெடுத்துச்சு. அந்த குட்டி சிங்கம் ஒரு பறவைய நாறு நாராக கிழித்தெடுக்கும் போது அண்ணன் பறவை பார்த்து இந்த கல்யாணம் நடக்காதுன்னு பெரிய சிங்கத்திடம் சொல்ல அந்த சிங்கம் கர்ஜித்தது. 

ஆனாலும் அண்ணன் பறவை அதுக்கெல்லாம் அசர மாட்டேன் என சொல்லிடுச்சு என்று சொல்ல தங்கைகள் எல்லோரும் ஷாக் ஆகின்றனர். அதே சமயம் சந்தோஷமும் அடைகின்றனர்.  அடுத்ததாக பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலன் ஆகியோர் வீட்டுக்கு முத்துப்பாண்டி வந்து அவனுக்கு விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என பயந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி வீட்டுக்கு வருகிறான். அவனிடம் சிவபாலன் பாக்கியம் ஆகியோர் சண்முகம் வீட்டுக்கு வந்து இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன கதை சொல்ல அவன் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் அப்படியா என சாதாரணமாக பேசுகிறான். 

கோபமாக இருக்கும் சௌந்தரபாண்டி முத்துப்பாண்டியிடம் பேச வர அம்மா ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்று சொல்லி அப்பாவை பேச விடாமல் செய்கிறான். மேலும் நீங்களும் உக்காருங்கப்பா சாப்பிட்டுகிட்டே பேசலாம் என்று சொல்லி முத்துப்பாண்டி உட்கார சௌந்தரபாண்டி இன்னும் கோபம் அதிகமாகி சாப்பாடு தட்டை தூக்கி வீசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: முத்துப்பாண்டியின் முடிவு.. காணாமல் போகும் ரத்னா, சண்முகத்துக்கு ஷாக் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News